மறைந்த சூரியனே

அஞ்சுகம் பெற்ற
அருந்தவப் புதல்வனே
திருக்குவளை தந்த
திராவிட முத்தே

கலைமகளின் முத்தமகனே
கலையுலகின் கதிரவனே
நமஸ்காரம் என்று நாளும் சொன்ன
நாமக்கட்டிகளுக்கு
வணக்கம் என்று சொல்லும்
வழக்கத்தை தந்தவனே

விதவைக்கும் பொட்டிட்டு
கைம்பெண் என களிப்புற்றவனே
ஆணுமன்றி பென்னுமன்றி
அடையாளம் இல்லாதவர்க்கு
திருநங்கை என திலகமிட்டு
திருநாமம் தந்தவனே

ஊனம் என்ற சொல்லை
உடைத்தெறிந்து
மாற்றுத்திறனாளி என
மார்தட்டி மகிழ்ந்தவனே

பன்முகம் கொண்ட
பார் போற்றும் பகலவனே
இனி உன்முகம்
காண்பது எப்போது ?

எழுதியவர் : கருப்பசாமி (5-Oct-18, 11:23 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
பார்வை : 66

மேலே