இரண்டு விடியல்கள் இனி
இந்த குழு அதிசயமானது...
ஆசியமயமானது...
ராஜ்குமார் வரவால்
உலகமயமானது...
இதுதான் ஊர் என இல்லாமல்
யாதும் ஊரே எனச் சொல்பவர்களில்
ராஜ்குமார் முதன்மையானவன்...
இருபதில் பிரிந்தாலும்
ஐம்பதில் சேர்ந்ததில்
அளவற்ற மகிழ்ச்சி...
தேனூறிய கல்லூரி நாட்களோடு..
அமுதும் ஊறிய அழகிய
சென்னை சுற்றுலாவில்
இந்திரா நகர் யூத் ஹாஸ்டல்
நினைவுகள் இன்னும்
நம்மை யூத் ஆகவே
எப்போதும் வைத்திருக்கும்...
அமெரிக்காவில் ராஜ்குமார்...
நமது குழு இன்று முதல்
இருபத்து நான்கு மணி
நேரமும் விழித்திருக்கும்...
இரண்டு விடியல்கள்
நமக்கு சொந்தம்...
வாழ்த்துக்கள் ராஜ்குமார்...
தொலைவுகளால் தொலையாது
மாறாத நட்பு... ராஜ்குமார்...
இந்த நதியில் இனி
உன் ஓடமும் ஓடட்டும்...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
😀👍👏🙋🏻♂🙏🌹