கண்களும் குளமாகுமே கல்லூரி நாட்களை நினைக்கையிலே
கண்களும் குளமாகுமே
கல்லூரி நாட்களை நினைக்கையிலே....
கனவுகள் நிறைவேறியதோ இல்லையோ
கற்பனைகளுக்கு எல்லை என்று
ஒன்றும் இல்லை
வானமும் எட்டி விடும் தூரம் தான் என்று
வாழ்க்கையும் எல்லையை முட்டி பார்க்க முற்பட்டது
முதல் பயிற்சி
முழு முயற்சி
முதல் காதல்
முடிவில் மோதல்
பல பிரிவுகள்
அதிலும் கட்டாயங்கள்
அனுபவங்களின் படிப்பினை
அவை தரும் பிடிப்பினை
சோம்பலின் முடிவு
நண்பனின் பரிவு
சோர்விலும் உற்சாகம்-ஆனால்
உற்சாகத்தில் துளி இல்லை சோர்வும்...
வகுப்பறையில் தூக்கம்
விடுதி அறையில் பாடம்
ஐந்து மாதமும் கொண்டாட்டம்
ஐந்து நாட்களில் முழு பாடமும் மனப்பாடம்
தேர்வும் தேர்தலும் ஒன்றுதான்
ஆனால் முடிவில்
தேர்ச்சியும் தோல்வியும் சமம்தான்
எங்களுக்கு...
முதல் மேஜையினருக்கு
முழு பாடமும் அத்துப்படி..
கடைசி மேஜையினருக்கு
வாழ்க்கை படமும் அத்துப்படி...
இன்றோ
அனைவரும் அவரவர் துறையில்
ஓய்வில்லாத உழைப்பு-ஆனால்
முடிவில் களைப்பு..
குடும்பத்திற்கே செலவிட நேரமில்லையாம்
குருவி போல் சேர்த்தாலும்
கையில் பணம் இல்லையாம்
சமூக வலைத்தளங்களில்
பற்பல பதிவேற்றங்கள்
அதிலும் சில முன்னேற்றங்கள்
இருப்பினும் ஏதோ ஒன்றை
பிரிந்துவிட்ட உணர்வு
மீண்டும் ஒருமுறையேனும் கிடைக்குமா
மீள முடியா நினைவுகளில் வாழ்ந்த
நாட்கள்????
-என்றும் அன்புடன் ஷாகி 💝