நானும் என் தோழியும்
என் இல்லத்தின் ராணி நான்
என் அடுக்களையின் ராணி அவள்
நான் இல்லாமல் அவள் தவிக்கும் தவிப்பு
எனக்கு மட்டும் தான் தெரியும் ..
நான் அடுக்களையில் நுழைந்த உடன்
அவள் படும் ஆனந்தம் அளவில்லாதது ...
எல்லை கடந்து விரிந்திருக்கின்றது ...
அவள் மனம் படும் அவஸ்தையை காண கண் கோடி வேண்டும் ..
அவள் என்னை எப்படி அடுக்களையின் உள் அழைகின்றாள் என்றால்
"" கடுகு கற்கண்டு போல் பாட
பட்டை இலவங்கம் பட்டு விரிக்க
மஞ்சள் மஞ்சனம் பேச
மிளகு மத்தளம் வாசிக்க
கடலைப்பருப்பு காற்று வீச
வடகம் வருக என அழைக்க
சோர்ந்து கிடந்த சோம்பு என்னை கண்டதும் துள்ளி குதிக்க ""
அப்பப்பா நான் படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை
எனதுடனான உறவை அவள் எப்பொழுதும் விட்டுகுடுப்பதில்லை..
அவள் தான் என் இனிய தோழி என் ஆருயிர் அஞ்சறைப்பெட்டி ..!!!