அன்பின் வழியது

அன்பின் வழியது :
ஆபிரகாம் வேளாங்கண்ணி:
தினமணி கவிதைமணி

~~~~~~~~~~~~~~~~
உன் கண்கள் உனதாயினும்
உனது உருவமதை உனக்கு
இன்ன தெனக் காட்டிடாது

நிலைக் கண்ணாடி முன்னாடி
நின்றாலே உன்னுருவை காட்டிய
பின்னால் உனக்கு தெரியும் அஃதே

பிறருக்கு உனது அன்பைக் காட்டு
பதிலுக்கு பிறர் அன்பை பொழிவர்
உனை நீ அறியும் அன்பின் வழியது

குறை குடமதை நிறைகுடமாக்கும்
சக்தி அன்பிற்கு மட்டுமே உள்ளது அச்
சக்தியை பெருகிற அன்பின் வழியது

•••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்
மும்பை, மகாராஷ்டிரா.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (8-Oct-18, 2:57 pm)
பார்வை : 339

மேலே