கற்பு
![](https://eluthu.com/images/loading.gif)
வணக்கம் அன்பு சகோதர சகோதரிகளே......................!
கற்பு என்பது பெண்ணிற்கு மட்டும் உரித்தானது இல்லை.... மனிதராய் பிறந்த அனைவருக்கும் உயிர் ஒன்று தானே.... உடல் மட்டும் தானே வேறே......
ஆண் என்ன பெண் என்ன ... எல்லோருக்கும் கற்பு ஒன்று தான்.....எண்ணங்களை சுமக்கும் மனதில் நல்ல எண்ணம் கொண்டார்(ள்) .... நன்னெறியாளன்( ள்)....
சாதிகள் இல்லையடி பாப்பா..... என பாரதி பாடிய இத்தமிழ் நாட்டில் தான் நாமும் வாழ்கிறோம்.... ஆண் சாதியும் இல்லை... பெண் சாதியும் இல்லை... மனிதன் என்ற ஒரே சாதி தான்.... பெண்ணினத்திற்கு மட்டுமா கண்ணியம் …? ஆண் இனத்திற்கும் உண்டு....
பேருந்தில் ஒரு பெண் ஆண் மகனின் பக்கத்தில் உட்காரும் போது ஒரு அடி சற்று விலகிய போதும்.... தள்ளி உட்காரும் போது ஒரு அடி சற்று விலகி இடமளிக்கும் போது ஆண் மகனிடம் காணும் கன்னியம் ஏனோ.....
சிறு குழந்தைகளிடம் அத்து மீறும் கொலைவெறி பிடித்தவனிடம் எங்கே சென்றது....???
பார்க்கும் பார்வை, பழகிய விதம், உதயவியின் வெளிப்பாடு, மனதின் நல்ல எண்ணமே கற்பு......
பெண்ணிற்கு துன்பம் வரும்போது பாதுக்காப்பு தருவதும்....... அதே பெண்ணிற்கு பயத்தை தருவதும் ஆண் மட்டும் தான்....
எங்கே ஆணால் பிரச்சனை வருதோ அதே சமயத்தில் மற்றொரு ஆணால் தான் பெண் பாதுக்காப்பினை உணருகிறாள்.....
எல்லாம் சந்தர்ப் சூழ்நிலை தான்.............
மனம் வைத்தால் மார்க்கம் உண்டு.....................
ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் அம்மா எல்லோரையும் பத்து மாதம் தான் சுமந்தாள்........
காவல் தெய்வமாய் நான்(பெண்கள்) பார்ப்பது அப்பாவும் , அண்ணனும் , நண்பனையும் தான்....!!!
வலிகளுடன்......................................................... மஞ்சுகீதாநாதன்