உறங்காத விழிகள்

வணக்கம் நண்பர்களே ....!!!

நான் எழுதும் வரிகள் உங்களை யோசிக்க வைத்தால் மிக்க மகிழ்ச்சி....

இது கதை இல்லை ... உங்கள் மனதில் நினைக்கும் எண்ணங்கள் தான் நான் கூறுவது... புதிதாய் இல்லை...

இந்த பர பரப்பான உலகில் அடுத்தவர்களை கண்டு புன்முறுவல் காட்ட கூட இயலாத நிலைமையில் இருக்குறோம்....


எந்தவொரு மாற்றத்தையும் நம்மில் தொடங்குவோம்...

நாம நிறைய யோசிப்போம் , நிறைய செயல் படுத்துனும்னு நினைப்போம் ஆனா அது .... இது வரைக்கும் அது மாதிரி நடந்து இருக்கமாட்டோம்

இதுக்கு என்ன ரீசன்னு எப்பயாவது யோசிக்க கூட டைம் இருக்காது நமக்கு ...

எல்லோருக்கும் நல்லவங்களா இருக்கணும் நல்லதா நினைப்போம் , உதவி செய்யணும் , யார் மேலும் கோப பட கூடாது இப்டி எல்லாம் யோசிப்போம் ...

வீட்டில் அம்மாவோட சண்ட இல்ல தங்கச்சி கூட சண்டை .... எதாவது நம்மள மீறி நடக்கும் ... கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்னு சொல்வாங்க....

எல்லாரும் நல்லவங்க தான் சந்தர்ப்ப சூழ்நிலையால நம்ம கேரக்ட்டர் கெட்டவங்களா காமிக்குது....


நாமலும் சந்தோஷம இருப்போம் நம்மள சுத்தி இருப்பவங்களும் சந்தோஷாமாக இருக்க முயற்ச்சி பண்ணுவோம்.... எப்பையும் நேர்மறை எண்ணங்களை மட்டும் நம்மை சுற்றி இருப்பவர்களிடம் விதைகளை விதைப்போம் ....

யாராவது உங்க கிட்ட கருத்து கேட்க வந்தா தப்புனா... தப்புன்னு சொல்லுங்க... ஏதுவ இருந்தாலும் உண்மையான மனசோட சொல்லுங்க

அவங்க போன பிறகு இப்படி சொல்லி இருக்கலாம் அப்டி சொல்லி இருக்கலாம்னு தோணாம எது உங்களுக்கு மனசு சொல்றத கேட்டு நடங்க...

இந்த உலகத்துல ரொம்ப கேட்ட விஷயம் அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்வது தான் .. ஏன் இப்டி சொல்றனா நீயலாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகிட்டியனு கேட்பாங்க ... வேற ஏதும் இல்ல....

இன்னும் நிறைய பேசலாம் ... (தொடரும்......)

எழுதியவர் : மஞ்சுகீதாநாதன் (10-Oct-18, 5:34 pm)
சேர்த்தது : பிரிய சகி
Tanglish : urangaadha vizhikal
பார்வை : 195

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே