கிராம மக்கள் அறிவியல்

மேகங்களின் கூட்டம் வானை மறைக்க மாலை நெருங்குமுன்னே சுற்றம் இருட்டி மங்கலான ஒளியில் திளைக்க, மழைத்துளிகள் மண்ணில் விழ யோசிக்கின்றன.
தயங்கி தயங்கி தரையை நனைக்கின்றன.
அவ்வளவு தானா என்று எண்ணிய நேரம் பகலுக்கு பகலான வெளிச்சம் பரவ,
பயங்கர வெடிச்சத்தம் ஒலிக்க திடுக்கிட்டுப் போனவன் திரும்பிப் பார்த்தேன்.
" பயந்துவிடாதே,
அர்ச்சுனா! என்றால் இடி காதவழி ஓடும். ",என்ற கிராம நம்பிக்கையில் என் வாய் முனுமுனுக்கிறது அர்ச்சுனா! அர்ச்சுனா! என்று.
இடி வேறு, மின்னல் வேறு என்கிறது கிராம மக்களின் அறிவியல்.
அவர்களுக்கு விளங்க வைப்பதென்றால் அது இயலாத காரியம் இடியும், மின்னலும் ஒன்றென.
" நீ போய் கண்டாயாக்கும்?
இடிச்சத்தம் இல்லாமல் மின்னல் வெட்டுகிறதே!
யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்?. ", என்று காரசாரமாகக் கேட்பார்கள்.
காதுகள் கேட்க இடிச்சத்தம், கண்கள் பார்க்க மின்னல்,
மேலே பிடித்தால் நாம் கருக வேண்டியது தான்.
ஆயிரம் அறிவியல் வளர்ந்தாலும் கிராம மக்களிடையே உள்ள விழிப்பு அறிவியலிற்கே அப்பாற்பட்டது.
இடி மின்னலுடன் மழை பெய்தால் பன மரத்தடியில் நிற்காதே என்பர்.
செப்பு பாத்திரங்களை கையில் கொண்டு மழையில் போகாதே என்பர்.
அதோ மீண்டும் மின்னல்!