தடைகள்
தாய் தந்தை இல்லா வேளையில்
உறவாடி மகிழ
உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க
பறந்தோடிச் சென்றேன்
பாவையிவள் முகம் காண
தடையாய் தாயும் தமையனும்
தமக்கையவள் குழந்தையும்
அள்ளியும் தராது கிள்ளியும் தராது
காதலியின் கண்ணசைவில் அவள்
உள்ளத்தை காட்டியது
கோவை இதழ் விரித்து
பாவையவள் கொடுத்தஅந்த
பறக்கும் முத்தம்