எழுத்து பிறப்பு

தமிழ் எழுத்து பிறப்பு

செம்மொழிக்கு ஈடிணை
இவ்வுலகில் ஏதும் இல்லை
ஒலி அணுக்களே..
எழுத்து பிறப்பிற்கு
அடிப்படைக் காரணம்
அவையின்றி ஏது தமிழினம்?
தமிழ் மொழியை முறையாய் கற்கணும்

ஒலி அணுக்கள்
உன்னுயிரின் முயற்சியால்
உடம்பினுள் இருக்கின்ற
காற்றினால் எழுமே
அவ்வொலி அணுக்கள்
பல சேர்ந்து
ஒலி எழுத்தை உண்டாக்குமே..
அவ்வொலிதான்
நம் செவிதனில் புலனாகுமே....

செம்மொழிக்கு ஈடிணை
இவ்வுலகில் ஏதும் இல்லை
ஒலி அணுக்களே..
எழுத்து பிறப்பிற்கு
அடிப்படைக் காரணம்
அவையின்றி ஏது தமிழினம்?
தமிழ் மொழியை முறையாய் கற்கணும்

சில தமிழ் எழுத்துக்கள்
தலையிலும் கழுத்திலும்
மூக்கிலும் மார்பிலும்
பிறப்பெடுத்தாலுமே
உதட்டிலும் நாக்கிலும்
பல்மேல்வாயிலும்
பிறந்து வளருமே
உறுப்பு வேறுபாட்டினால்
வெவ்வேறு எழுத்துக்களாய்
வேறுபட்ட ஒலியுடன்
தோன்றிதான் மகிழ்விக்கும்
என்பதில் பொய் இல்லை
ழகரம் என்பது
தமிழுக்கு சிறப்பு
அந்த செம்மொழிக்கு ஈடிணை
இவ்வுலகில் ஏதும் இல்லை?!

பிற எழுத்துக்கள் பிறப்பிற்கு
அடிப்படையாய் இருப்பது
முதல் எழுத்தே
விரைவில் நீ
புரிந்து கொள்வாய்
என் தாய்மொழி கருத்தை
உயிரும் உடம்புமாய்
முப்பதிற்குப் பின்னே
பத்துவகை சார்பெழுத்து
வந்து இயங்குமே
அவை உயிர்மெய் ஆய்தமும்
உயிரளபெடையும்
ஒற்றளபெடையும்
குற்றியலுகரமும்
குற்றியலுகரமும்
ஐகாரக்குறுக்கமும்
ஔகாரக்குறுக்கமும்
மகரக்குறுக்கமும்
ஆய்தக்குறுக்கமும்
முதலெழுத்துடன்
சார்ந்து இயங்கிதான்
சிறப்படையுமே!

பெயர்ச்சொல்லை
வினைச்சொல்லாய்
மாற்றியமைக்கும்
சொல்லிசைபடையே

செவிக்கு இனிய
ஓசையைத் தரும்
இன்னிசை அளபெடையே

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழையே
இவ்வளபெடையில்
அளபெடுப்பினும்
அளபெடாவிடினும்
பிழையின்றி யாப்பிலக்கணம்
அமைந்துள்ளதைக் கண்டீரோ
செம்மொழிக்கு ஈடிணை
வேறு உண்டென்று சொல்வீரோ?

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Oct-18, 3:37 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 46

மேலே