இறைவன்-மனிதன்
வாழத்தான் நமக்கு மண்ணைப் படைத்தான்
வாழ மண்ணில் எல்லாம் படைத்தான்
சீராக வாழ்ந்திட மறையில் எல்லாம் தந்தான்
மறையும் தெரியாது மறைபொருளும் அறியாது
மனம் போன போக்கிலே மனிதர் நாம் போனால்
'அவன்' என்ன செய்வான் , வெறுத்து போய்
படைத்ததை அழித்து மீண்டும் படைத்திடுவான்
இப்படித்தான் மாறி மாறி யுகங்கள் வருகின்றன
எத்தனை யுகங்கள் மாறி வந்தாலும் மனிதன்
போக்கு மாறுவதில்லையே ....பாவம் படைப்பின் தலைவன்
படைத்தலை நிறுத்தி விடுவானோ , அழித்தபின்
.