விடியலும் இருண்டதோ

பணம் தான் வாழ்க்கை
என்று காலம் மாறியதனாலே /
இருளுக்கும் விடியலுக்கும்
வேற்றுமை தெரியவில்லை /
ஏழைகளின் வாழ்வினிலே/

உடல் வருத்தி வெயிலினில் காய்ந்து /
மழைக் குளித்து உழைத்தாலும் /
உட்காந்து உண்ண வழியில்லை /
விலைவாசி உயர்வினாலே /

எங்கும் கலப்படம் /
அனைத்திலும் கலப்படம் /
உண்ணும் உணவில் பாதி விசம் /
அயல் நாட்டு இறக்குமதியினாலே /

நாகரிக வாழ்க்கை காடு. வேளாண்மையெல்லாம் வேட்டை/
நாட்டுப் புரம் எல்லாம் பெரும் கோட்டை /
சுவாசிக்கத் தூய்மையான
காற்று இல்லை இதனாலே /

மாறி மாறி ஆட்சி மேடை
ஏறி மார்பு தட்டிப் பேச்சு /
மாற்றங்கள் தென்பட வில்லை /
மக்கள் வாழ்வாதாரத்திலே /

உணர்வுக்கு மதிப்பு இல்லை /
உழைப்பவனுக்கு தகுந்த
ஊதியம் இல்லை /
உண்மையை எடுத்துரைத்து
நியாயம் கேட்டால்
கேட்பவன் உயிருக்கு
உத்தரவாதம் இல்லை /

அடிமை வாழ்வு முடிவு காண்பதில்லை /
இவைகளினாலே தான் விடியலும் இருண்டதோ ?
விவசாயிகளின் இல்லத்திலே /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Oct-18, 12:25 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 148

மேலே