சாரிமன்னிச்சுக்கோ

மூச்சுக்கு முப்பது தடவை
என் பெயரை சொல்லி சொல்லி காதலித்தவள்
மூன்று மாதம் கழித்து
என் கையில் கொடுத்தாள்
திருமண அழைப்பிதழை .....!
மூன்று மாதத்திலேயே
காதலித்தவளை கைபிடிக்கும் அதிர்ஷ்டமா ...
என ..மனதுக்குள் வியந்துகொன்டே ,,,
அழைப்பிதழை பிரித்தேன் ....
அதிர்ந்துபோனேன் ...!
மணமகன் என்ற இடத்தில்..
என் பெயர் இல்லை ,,!
மவுனமாக தலை நிமிர்ந்தேன் .
அவள் சொன்னாள்
சாரி(மன்னிச்சுக்கோ )......!!!!

எழுதியவர் : ஆரூர்.பாலநாதன் (16-Oct-18, 6:33 am)
சேர்த்தது : -ஆரூர் பாலநாதன்
பார்வை : 104

மேலே