என் இல்லத்தரசி
நான் களைத்து வந்த போதெல்லாம்
நீயும் அடுப்பங்கரையில் அலுத்து
சலித்தாலும் புன்னகை கீற்று ஒன்று
எனக்கு தருவாயே...
அக்னி நட்சத்திர வெயிலில் கூட
உன் கைத்தீண்டலால் தென்றலை
வரவழைத்து தாலாட்டு பாடாமலெனை
தூங்க வைப்பாயே...
விடியும் முன்னே குளித்து ஈரக்
கொண்டை துவாலையோடு
இன்முகம் காட்டி என் இனிய காலை
துவங்கி வைப்பாயே...
பெண்ணே..உன்னை மனைவியாய்
அடைந்ததற்கு மாதவம் செய்தேனோ..
கடவுளாய் அனுப்பி வைத்த
என் காதல் தெய்வம் நீதானோ...