ஆலமரம்!!!

ஆலம் விழுதே... ஓ... ஆலம் விழுதே
நீ என்னில் விழுவாயோ?
என்னில் நீயும்' விழுந்திடும் முன்னே,
மண்ணில் புதைந்தாயோ?
நான் உரமாய் மாறி நீயும் வாழ்ந்திட சாத்தியமா?
நான் இறந்த பிறகும் உரமாய் இருப்பேன் சம்மதமா?
அடி, உனது நிழலிலே,
எனக்கு இடமும் கிடைக்குமா?
வாடை காற்றினிலும், ஓடை காற்றினிலும்
வாடாமல் அன்பே எனக்காய்  வாழ்வாய்!

கோடை காலத்திலே,
நீயும் வாடி இலை உதிர்த்திட,
கண்ணின் ஒருதுளி நீர் கொண்டு,
உன் பசுமை காத்திடுவேன்!
உந்தன் கிளை நழுவி
எங்கோ விழுந்த ஒருஇலையை,
தேடி எடுத்த பின்பு,
அதை மீண்டும் மலர செய்வேன்!
வாடை காற்றினிலும், ஓடை காற்றினிலும்,
வாடாமல் அன்பே எனக்காய்  வாழ்வாய்!

சங்கில் மழை புகுந்து,
ஒரு முத்தாய் ஆவது போல்,
என்னில் நீ நுழைந்ததால்,
மெய்க்காதல்  துடைங்கியதே!
திங்கள் மறைந்ததென்று,
ஞாயிறு நினைப்பதில்லை!
திங்கள் மறைவதில்லை,
அதை ஞாயிறு மறுப்பதில்லை!
வாடை காற்றினிலும், ஓடை காற்றினிலும்,
வாடாமல் அன்பே எனக்காய்  வாழ்வாய்!

நான் தவழும் வயதினிலே
என் தாய், உன்மேல் தூளி தந்தாள்,
கரங்கள் நீட்டி என்னை
வாரி அணைத்து கொண்டாய்!
காற்றில் இசை அமைத்து
தாலாட்டும் நீ படைத்துத்தந்தாய்!
தாயின் கருவறையாய்
என்னை மீண்டும் நீயே சுமந்தாய்!
வாடை காற்றினிலும், ஓடை காற்றினிலும்,
வாடாமல் அன்பே எனக்காய்  வாழ்வாய்!

சின்னஞ்சிறு வயதில்
எனக்கு ஊஞ்சல் கொடுத்தவளே!
வெயிலில் நான் வாட
எனக்கு நிழலை கொடுத்தவளே!
மழையில் நான் நனைய
என் குடையாய் நின்றவளே!
வாடை காற்றினிலும், ஓடை காற்றினிலும்,
வாடாமல் அன்பே எனக்காய்  வாழ்வாய்!

தேடாமல் கிடைத்த ஒரு பொருளை
நான் தொலையாமல் துளைப்பேனோ?
வாழகிடைத்த அப்பொருளை
நான் துகளாக நினைப்பேனோ?
நான் வாழும் காலம் வரை
உனக்கு மரணம் இல்லை!
தாயே... என்னை...
வருடி போவாய்....!

எழுதியவர் : இரா.உமாசங்கர் (16-Oct-18, 4:00 pm)
சேர்த்தது : இராஉமாசங்கர்
பார்வை : 594

மேலே