காதல் கைக்குட்டை

மழை சாரல் உதிர் உதிராய் உன் மேனி தனில்
வருணன் உனை வருடியதால் சிரித்தானோ என்னவோ
இடியும் மின்னலுமாய் நீலவானம் மாறியதே
கருவிழிகள் காந்தமாய்
இரும்பிதயத்தை இறுக்கியதே
உன் கைக்குட்டையாய் பிறவேனோ
என ஏங்காத நாள் இல்லையடி
உன் மேனியிலிருந்து உதிரும் பூவும் அறியுமோ
இன்னொருமுறை உன் கருங்கூந்தல்
கிடைக்குமா என்று?

எழுதியவர் : VENKATESH K S (18-Oct-18, 12:27 pm)
சேர்த்தது : Venkatesh
Tanglish : kaadhal kaikuttai
பார்வை : 95

மேலே