கடைசி பார்வை
அழகிய சோலையில் நான் அமர்ந்திருந்தாலும் அருகில் நீ இல்லாததால்
சோலைவனமும் பாலைவனமாய் காட்சியளிக்கிறது
குளிர் காற்று அடித்தாலும் உன் சுவாசத்தை உணராததால்
குளிர் காற்றும் தீ காற்றாய் மாறி என்னை சுடுகிறது
என்னோடு நீ வந்த பாதைகள் இப்போது தனியாக
நான் போவதை பார்த்து கண்ணீர் பூக்களாய் கதறுகிறது
எப்பொழுதும் உன்னுடனே ஒன்றான நான் இப்பொழுது
தனியாக நான் வாழ தவிக்கிறேன்
உன் நினைவை மட்டும் கொடுத்து ஏன் எடுத்த
என் இதயத்தை தராமல் போனாய் பெண்ணே
நித்தமும் கொல்லும் உன் நினைவுகளால் நான்
உயிறற்ற உடலாய் வாழ்கிறேன்
ஒருமுறையாவது உன் முகத்தை காண வேண்டும் கண்ணே
உன் கடைசி பார்வையிலாவது நான் காலம் முழுவதும் வாழ்கிறேன்!!!