ஒருதலைக் காதல்

காதலைச் சொன்னோமென்ற
கணநேரச் சந்தோசமும்
காணக்கிடைக்கவில்லை எனக்கு...
ஏலவே...எப்போதோ...உன்னிடம்
தொலைந்த என்னிதயத்தைத்
தாவென்கிறான் இன்னொருத்தன்...
வெறுங்கையோ டிலங்கை புக்க
வேந்த னிராவணன் போல் இன்று
வில்லறு நிராயுதபாணியாய் நான்...
~ தமிழ்க்கிழவி (2018)