வானமே உனது எல்லை
விதியை வென்றிடு /
பகைவனைத் திருத்திடு /
எதிரியை வரவேற்றிடு /
எதிர்ப்பதற்குத் துணிவை வளர்த்திடு /
துன்பத்தை மறந்திடு /
துயரத்தை மென்று விழுங்கிடு/
இன்பத்தை பகிர்ந்திடு /
சோகத்தை மறைத்திடு /
கூடிப் பேசும் போது சிரித்திடு /
தனிமையில் அமரும் போது அழுதிடு /
முடிந்த நிகழ்வை மடித்திடு /
எதிர்கால எண்ணத்தை விரித்திடு /
ஊக்கத்தோடு எழுந்திடு /
ஊனம் உள்ள குணத்தை மாற்றிடு /
ஊர் பார்க்க உயர்ந்திடு /
உறவு போற்ற வாழ்ந்திடு /
வாய்ப்பை சிக்கனமாகப் பிடித்திடு /
தவறினால் முயற்சியைத் தொடந்திடு /
திருட்டை எதிர்த்திடு /
திருடுவோரை உமிழ்ந்திடு /
நாளை நமதே என்று போற்றிடு /
நாளும் பொழுதும் நன்மை புரிந்திடு /
அனுபவப் பாடம் கற்றிடு /
அதை அனுதினமும் நினைவில் வைத்திடு/
கண்ணியம் தவறாமல் வாழ்ந்திடு /
பெண்ணியம் காத்து மகிழ்ந்திடு /
மனிதம் மிக்க மனிதனாக உலாவிடு /மானிடர் மாறவாப் புகழோடு மறைந்திடு/