உன் விழிகள்
.
குரங்காட்டியின்
கையில்
பிரம்பைப்போல்
உந்தன் விழிகள் ...
சுழலும் பார்வையில்
சுழன்று சுழன்று
தாவுகிறேன்
குதிக்கிறேன்
கரணங்கள்
அடிக்கிறேன் ...
பார்வையாளராய்
எவருமே
இல்லையென்றாலும்
பராவாயில்லை
உன்
விழிகளை மட்டும்
வேறெங்கிலும்
திருப்பிவிடாதே ...
என் இதயத்தின்
ஜீவாதாரத்திற்கான
சில்லறைகளையும்
உன் பார்வையிலிருந்துதான்
பொக்றுகிக்
கொள்கிறேன் ...