நீ வேண்டும் எனக்கு -

நீளக்கனவில்
நீளும் நினைவில்
நிரந்தரத் துடிப்பில்
நீ வேண்டும் எனக்கு

உனக்கென
நிற்கும் மனதில்
ஓடும் இதயத்தில்
ஒழுகும் உயிரில்
விழிக் கொணரும் கண்ணீரில்
விரல் தழுவும் கவிதையில்
நீ வேண்டும் எனக்கு

கார்மேக மழையின்
நீரோடும் வீதியில்
மார்பில் சாய்ந்தபடி
வெகுதூரம் நடந்துச்செல்ல
நீ வேண்டும் எனக்கு

சோர்வுற்ற நேரம்
சொர்க்கம் தந்த மடியாய்
பார்க்கயியலா இருளில்
பருவம் பார்த்த ஒளியாய்
நீ வேண்டும் எனக்கு

மறையும் சூரியனால்
ஒளிரும் சந்திரனாய்
நீ வேண்டும் எனக்கு

உறையும் பணியில்
உறங்கும் வெப்பமாய்
நீ வேண்டும் எனக்கு

காதல் கடிகாரமாய் -என்னால்
மயங்கும் குடிகாரனாய்
நொடிப் பொழுதும் நீங்காதவனாய்
நீ வேண்டும் எனக்கு

மெய்யாய், மெய்யின் உயிராய்
மெழுகாய், மெழுகின் தீபமாய்
தினமுருகி மனவரும்பும்
என்னுள மலருக்கு மெல்லொளியாய்
நீ வேண்டும் எனக்கு....

நீ வேண்டும்
நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்

---கல்லறை

எழுதியவர் : கல்லறை செல்வன் (23-Oct-18, 12:26 am)
Tanglish : nee vENtum enakku
பார்வை : 9525

மேலே