காதல்
அன்றுனை ஒரே ஒரு முறைதான்
பார்த்தேன் பார்த்த என் விழிகளுக்கு
உன் மலர்விழிப் பார்வையை மறக்க தெரியலையே
நீயோ ,உன் காதலுக்காய் ஏங்கும்
என் கண்களை இன்னும் உன் கண்கள்கொண்டு
பார்க்கவும் இல்லையே , பெண்ணே
உன்னையே நினைத்து உருகுகின்றதடி என் நெஞ்சு
புரிந்துகொள்வாயா என் காதலை ஏற்றுக்கொள்வாயா
தினமும் இப்போது பார்த்தும்
இன்னும் பாராமுகமாய் நீ இருப்பதாலே
இந்த கோப்பையும் மதுவுமாய் இருக்கின்றேனடி நான்,
பெண்ணே; எனக்காக ஒரு முறை வந்து நீ,
இந்த மது கிண்ணத்தில் உந்தன்
செவ்விதழ்கள் கொண்டு ஒரு முத்தம் தந்துவிட்டால்
என் காதல் தாகம் தணிந்திடுமே , பின்னே
இந்த கிண்ணத்தை தொடவும் மாட்டேன் நான்
அது நீதான் என்று நினைத்து
நீ என்னவளாகும் வரை -அதன் பின்
மதுவே நீ என்னவளேன்றானபின்
வேறு மது நாடுவேனோ நான்
உந்தன் மது.