உயரிய விருது

உயரிய விருது
கர்ணனின் புகழ் மட்டுமல்ல
அவன் ஏக்கமும்
இவ்வுலகில் வாழ்ந்து
கொண்டுதான்
இருக்கிறது...

திறமைக்கு அங்கீகாரம்
கிட்டாத
ஒவ்வொருவரும்
கர்ணனை போலவே
ஏங்கி தவிக்கிறோம்...

எம்மிடம் விட்டு
நீங்கிச் சென்ற
அந்நாள்
மாணவன்,
என் இந்நாள்
மாணவனிடம்
சொன்னான்;
அவரை போன்ற
ஆசிரியரிடம்
பயிலும் நீ
என்றும்
நிலையான
வாழ்வறிவைப்
பெறுவாயென

இதைக் கேட்டு
குளிர்ந்த மனம்,
அங்கீகாரம்
எதற்கு;
அவன் வார்த்தைகளே
உயரிய விருது
என நெகிழ்ந்தது...

எழுதியவர் : செல்வமணி.G (23-Oct-18, 6:56 pm)
சேர்த்தது : Selvamani
Tanglish : uyariya viruthu
பார்வை : 1697

மேலே