கீழ் மக்கள்
விதவிதமாக மின்னுகின்றன விளக்குகள்.
இருண்டே கிடக்கிறது மனித மனம்.
சாதியும் மதமும் மனித மனங்களில் தொங்குகின்றன திரைகளாய்.
உயிர் குடிக்கும் வெறி உன்னுடைய இயல்பா?
நீயும் உன்னிடம் கேட்டுப்பார்.
மீறக்கூடாத கரைகளையெல்லாம் உடைத்தெறிந்து உடைக்கப்பட வேண்டிய கரைகளைப் பேணி உயிர் குடிக்கிறீர்கள்.
உங்கள் சிந்தனை முற்றிலும் ஆபத்தானது.
கள்ளக்காதல் மானக்கேடு அல்ல.
சாதி மதம் தாண்டி இரு இதயங்கள் நேசித்தால் மட்டும் மானக்கேடு.
உங்களை நீங்களே தீயிலிட்டுக் கொள்ளுங்கள்.
அப்போதாவது மனம் தூய்மை அடைகிறீர்களா என்று பார்ப்போம்?
எரியும் நெருப்பு கூட உங்க இதயத்தை எரிக்காது.
ஏனெனில் உங்க இதயமெல்லாம் சாதி மத வெறி.
அதுவே துடிப்பாக சந்ததி சந்ததியாக காட்டுமிராண்டியாக இரத்தத்தால் மண் சிவக்க அருவருக்கத்தக்க வாழ்வையே நீங்கள் வாழ்கிறீர்கள்.
உங்கள் புத்திக்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உரைக்காத போது,
நல்ல விடயங்களைச் செய்ய உங்கள் மனம் எப்படி துணியும்?
அன்பில்லா நீங்கள் பண்பில்லா மிருகங்களிலும் கீழானவர்களாக
வாழ்கிறார்கள்.
பசிக்குக்கு வேட்டையாடும் விலங்குகளைவிட வெறி உணர்ச்சிக்கு பழிஉணர்ச்சிக்கு ருசிப்பதற்கு வேட்டையாடும் நீங்க கீழ் மக்களே.