பிரபஞ்சம்
பிரபஞ்சம்
முழுதும் பஞ்சம்
வலிக்கிறது எந்தன் நெஞ்சம்
ஏழைக்கு இல்லை தஞ்சம்
இருப்போர் கொடுங்கள் கொஞ்சம்
மேகம் கொடுப்பதில் கஞ்சம்
நீர் கேட்டு தாவரங்கள் கெஞ்சும்
நிலவுதனை உலகமது கொஞ்சும்
நம் செவ்வாயின் கவிதை
செவ்வாயை மிஞ்சும்
வானரங்கள் நமைக்கண்டு அஞ்சும்
வான் அரங்கம் தேன் கவியால் விஞ்சும்
புதுவைக் குமார்