ஈ ஃ பில் கோபுர உச்சியில் ஏஞ்சல்ஸ் போல் சிறகு விரித்து

ஈ ஃ பில் கோபுர உச்சியில்
ஏஞ்சல்ஸ் போல் சிறகு விரித்து நாம் பறப்போமா
காதல் அலை பாயும் கடற்கரை எல்லாம்
கைகோர்த்து நாம் நடப்போமா
தேம்ஸ் நதித் தென்றலில் தனியே நான் நிற்கையில்
பின்னே மெல்ல வந்து அணைப்பாயா
ஆல்ப்ஸ் மலைக் குளிரில்
ஸ்வெட்டர் இல்லாமல் நான் வெடவெடக்கையில்
கட்டியணைத்து காத்தருள் புரிவாயா
நீலவிழி நைல் நதியே நெஞ்சில் ஓடும் காவிரியே
காலமெல்லாம் காதல் கீதம் பாடித் திரிவோமா ?

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-18, 6:16 pm)
பார்வை : 91

மேலே