உனைக்கண்ட அந்நொடியில்

அன்றொரு நாள் .....
உனை எண்ணி , முழுவதும் புரிந்து
என்னுள் வைக்க அவாக் கொண்டேன் ..

மனதில் ஆயிரமாயிரம் புயலடித்தும்
தூக்கமின்றி வதைந்தாலும் ..
அம்மன அலைகளைத் தகர்த்தெறிந்து...

கண்ணில் உனைக் கண்டு ....
கண்ணே , முத்தே , என் கனிரசமே
என்று நின் செவ்விதழில் .....
வண்ணத்தால் சாயம் பூசி ...கொஞ்சித் தீர்க்க
ஒத்திகைகளும் பல செய்தேன் ..

இன்று ...
உன்னைக் கண்ட அந்நொடியில்
கற்றதனைத்தும் மறந்து , நினைச்சொல்ல
எனக்கோர் வார்த்தை கிடைக்காமல் விழிப்பதேனோ ???

வெண்பனியும் சுடுவதேனோ??
அன்று வண்ண ஓவியங்களாய்க் கண்டதெல்லாம்
காகிதக் குப்பைகளானதுதான் ஏனோ??

என் வாழ்க்கையே ...
முட்களாலான பஞ்சணையில் உறங்கி ..
உன் வேல்விழிகளில் சிக்கி..
உன் கரங்களில் சிக்கிய வண்ணத்து பூச்சியாய்.....
வழியேதும் அறியாமல் விழிப்பதேனோ ??????

எழுதியவர் : Sevagi (30-Oct-18, 6:33 pm)
சேர்த்தது : Sevagi
பார்வை : 372

மேலே