மிகச் சிறியது வாழ்க்கை
தலைப்பு: இவ்வளவே வாழ்க்கை
இருட்டில்(கருவரையில்)உதிக்கிறோம்,கருவாய் வளர்கிறோம் தாய் அவள் குதிரம் மட்டும் உண்டு......
அதிலும் கலையாமல் 10 மாதம்
தாக்குபிடித்து பூமியில் குதிக்குரோம் வெறுமேனியாய்(எதைத்தான் கொண்டுவந்தோம்).....
பிடிப்புக்கு உறவென்னும் கொடி(தொப்புள் கொடி) இருக்கு அதையும் வெட்டி எரிகிறார்கள்......
அதற்க்கும் அசுங்கவில்லை துள்ளினோம் கைகால்கள் நீட்டி....
குழந்தை வளர தாய்ப்பால் இருக்கு ,அதுவும் இல்லை கடவுளின் பிள்ளைகளுக்கு (அனாதைகளுக்கு),
எப்படியோ வளர்ந்தோம்....
நாலு கால் நடை பயின்று சுவர் பிடித்து நிற்க்கிறோம்,
இரண்டு கால் நடையில் அன்ன நடை பயின்று, பல முறை கீழே விழுந்து ஒருவழியாக தனியாளாய் நிற்க்கிறோம்.....
நடையானது படிப்படியாக குதித்தல் ,ஆடுதல் ,ஓடுதல், தாண்டுதல் என்று மாறிக்கொள்கிறது நம் வளர்ச்சியில்.......
அழுகையை தவிர வேறு மொழி தெரியாத நாம், அடுத்தவர் வாய் பார்த்து யாருக்கும் புரியாத மொழி ஒன்று பயில்கிறோம்......
அந்த மொழிக்கும் அகாராதி உண்டு அதற்கு அம்மா என்று பெயர்.......
இறுதியாக தாய் அவள் வகுப்பில் தாய் மொழி பயள்கிறோம்.....
ஒரு வழியாக தாயின் துணையால் உலகுக்கு வந்தாகிவிட்டது.
ஆனால் அறிமுகம் முக்கியமல்லவா அதற்கும் ஆள் உண்டு அவர்க்கு தந்தை என்று பெயர்.
தன் தோல் மேல் சுமந்து அறிமுகம் செய்கிறார் இதுதான் உலகமென்று.....
சற்றும் யோசியாமல் மேலே தூக்கி எரிகிறார் இது தான் வானமென்று நாமும் பயமின்றி கீழே விழுகிறோம் இருகைகள் தாங்கிபிடிக்கிறது அவர் நம் தகப்பன்தான்.
தகப்பன் கீழே நிற்பான் எனவறிந்தால் மலையில் இருந்தும் குதித்து விடுவோம் போலும்...
பயம் என் தந்தையை பார்த்து பயந்து போய் விட்டதோ....
ஏணே சேட்டை செய்ய மட்டும் பயம் வருகிறது தந்தை அவர் பக்கம்நின்றால்.
தந்தை அவர் கண்டிப்பு தான் உலகிற்கு பல உத்தமர்களை அறிமுகம் செய்திருக்கிறது....
ஆக தாய் தந்தை இல்லாதோர்க்கு இத்தனையும் கற்றுக்கொடுத்தது யாரோ?கடவுளாக இருக்குமோ?
ஒரு வேலை கடவுள் நிஜமாவே இருக்காரோ?....
உண்ண தூங்க என்று இரண்டு பெறும் வேலைகளை சுமார் ஐந்து வருடங்கள் இடைவிடாது செய்துவந்தோம்.
அதற்க்கு ஆப்பு வைத்தாகிவிட்டது
தாய் பறவை தன் குஞ்சுகளை பறக்காட்ட சரியான நேரமிது...
கண்ணில் நீர் ததும்ப ஒரு அறைக்குள் விட்டு செல்கிறாள் அன்னை.
அழுகையை துடைத்துக்கொன்டு ஏரிட்டுப்பார்த்தால் அங்கு ஒரு அன்னை கையில் பிரம்புடன் கரும்பலகை முன் நிற்க்கிறாள்
அவளுக்கு பெயர் ஆசிரியையாம்,
சற்றே கண்டிப்பான அன்னை தான் அவள் போலும், அவளுக்கு அந்த அறை முழுவதும் குழந்தைகள்.
அந்த அறைக்கு பெயர் பள்ளிக்கூடமாம்......
நாட்கள் கழிய அமுகை ஆனந்தமாக மாற அந்த அன்னை பழக்கமாணவள் ஆகிறாள். உலகத்தை கற்றுத்தறுகிறாள் அவளுடைய பிள்ளைகளான நாங்கள் (மாணாக்கர்கள்) உறவென்னும் வார்த்தையின் அர்த்தங்களில் என்றும் உயர்ந்த இடத்தில் இருக்கும் நண்பர்கள் ஆகிறோம்.
வருடங்கள் செல்ல செல்ல அன்னைகள்(ஆசிரியர்கள்) மாறிக்கொன்டுதான் இருக்கிறார்கள்.
அறிவென்னும் சுடரை ஒவ்வொருவரும் மாறி மாறி சீண்டி விடுகிறார்கள்,அது பிரகாசமாக எரியத் தொடங்குகிறது.......
அது அறியாமை என்னும் இருட்டில் இருந்து என்றும் நமைக்காக்கும்.
மீசை அரும்புகிறது, நட்பு பெறுகுகிறது ,அது எதையும் செய் என தைரியம் தருகிறது......
அதற்க்குள் சூது வாது தேவையற்றதாய் போகிறது. நல்லது கெட்டது அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது.....
நட்பு பட்டாளம் கூட இருந்தால் உலகையே வென்று விடலாம் என தோன்றுகிறது....
ஏணோ மானமும் ரோசமமும் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது ஆக சண்டை போடுவதும் பின்னர் சமாதானம் ஆவதும் நட்புக்குள் சகஜம் ஆகிறது.....
பின்னர் எச்சரிக்கை என்னும் வார்த்தைக்கு மறு பெயராம் காதல்,
பிராயத்தில் காதல் சிலருக்கு இனிப்பாண அனுபவங்களையும் சிலருக்கு கசப்பாண அனுபவங்களையும் தந்தே போகிறது......
பெண் ஒருவள் மிக அழகாக தெரிந்து விட்டால் என்றால் அவன் காதலில் விழுந்து விட்டான் என்றே பொருள்.
அவள் சிறித்தால் போதும் கருங்கல்லை கூட உதிர்த்து மாலை பின்னிவிடுவான்.
அவள் முறைத்தால் ஏதோ தீப்பந்தை விழுங்கியதாய் உணர்வான்.
விருப்பமானவள் பார்த்தாள் மின்சாரம் பாய்வதும் பட்டாம்பூச்சி பறப்பதும் காதலில் புதிதல்ல.
அது இளமை துடிப்பில் ஷார்மோன்செய்யும் வேலைதான். ஆனால் அது விட்டுச் செல்லும் வலிகள் கூட சுகம் தான்..
ஏணோ காதலுக்கு மட்டும் அவ்வளவு சக்தி........
தந்தை உலைப்பில் காலம் தள்ளி உலகை பாதி அரிந்து முடிப்பதற்க்குள் வேலைக்கு செல்லவேண்டிய அவசியம் வருகிறது......
உழைக்கும் நேரமிது, தந்தை தன் நீண்ட பதவி வகித்த குடும்ப பொறுப்பில் இருந்து விலகி என்னை அமர்த்திவிட்டார்.
என்ன ஒரு கடினமான பதவி இது, எப்படி இவ்வளவு நாள் இந்த மனிதன் இந்த பதவியில் இருந்து வந்தார் என தோண்றச்செய்கிறது..
தன் தந்தையை எண்ணி பெருமிதம் கொள்ளும் நேரமிது....
அன்றாட தேவைகளுக்கு அல்லல் பட்டு , வேலை தேடி தெருவெங்கும் திரிந்து எப்படியோ வாழ்வின் பாதி ஆயுள் முடிவதற்க்குள் ஒரு வேலை கிடைத்து விட்டது.
சம்பாதிக்க ஆரம்பித்து,தாய் தந்தையை நன்கு பார்த்து கொள்ள தேவையான தகுதி பெற்றாகிவிட்டது.
வீடு சொத்து சேர்க்க எண்ணி வாழ்வில் இதுவாவேன் அதுவாவேன் என்ற கணவுகளை எல்லாம் மூட்டை கட்டியியிற்று....
பணம்-உலகே இதை சேர்க்க ஓடுகையில் நாம் மட்டும் எண்ண விதிவிலக்கா என அதண் பிண்ணே ஓட ஆரம்பிக்க......
அடுத்தது கால் கட்டு என்னும் ஒரு சொல் வாழ்வில் வந்து செல்ல...
தாய் தந்தைக்கு அடுத்த இடத்தில் தாரம் என்று ஒரு சொந்தம் வந்து சேர்கிறது......
அவள் அனைத்துக்கும் உடையவள் ஆகிறாள், சுப துக்கங்கள் அவளோடு பதியப்படுகிறது.....
அவள் பிள்ளை செல்வம் என்னும் மிகப்பெரிய செல்வத்தை நமக்கு தருகிறாள்......
நம் தாய் தந்தைக்குக்கும் தாத்தா பாட்டி என்று ஒரு பட்டம் வழங்கப்டுகிறது.....
வயதில் மூத்திருந்தும் ஏனோ அவர்கள் குழந்தையோடு குழந்தையாக மாறிப்போய் விடுகிறார்கள்......
வீடு மனைவி மக்கள் என குடும்பம் விரிகிறது பொறுப்புகள் கூடுகிறது......
வீட்டு செலவு, படிப்புச் செலவு, மருத்துவச் செலவு என செலவுகள் பட்டியல் இட
செலவோடு செலவாக சிறிது சேமிப்பும் சேர்த்துக் கொள்கிறோம்.......
ஆண்பிள்ளை க்கு நல்வழி காட்டவும், பெண் பிள்ளைக்கு நல் வரண் பார்க்கவும் ஓயாமல் உழைத்து அவர்கள் வாழ்வுக்கு வழிகாட்டி ஆகிறோம்.......
வயது முதிர்கிறது உடல் வலிமை குறைகிறது துணைவியின் துணை கொண்டு காலம் மெல்லக் கழிகிறது.......
பிள்ளைகளின் பிள்ளைகளை கொஞ்சி கொஞ்சி வாழ்க்கை மேலும் இனிதாகிறது......
மாத்திரைகளில் காலம் தள்ள வேண்டிய அவசியமாகிறது....
கடைசி காலம் நெருங்கிவிட்டது... பிள்ளைகள் சூழ்ந்து நிற்கிறார்களா
துணைவியோ அவள் பரிவிலும் கவணிப்பிலும் எமனை அண்ட விடாமல் தடுக்க முயர்ச்சிக்கிறாள்.
தாய்க்கு பின் தாரம் தாரத்திற்கு பின் எவரும் கிடையாது......
ஆனாலும் எமன், அவன் தான் வித்தகனாயிற்றே இலாவகமாக உடலில் இருந்து உயிரை மட்டும் கவர்ந்து செல்கிறான்.
(எதைத்தான் கொன்டு செல்கிறோம் உலகை விட்டு உயிரை தவிர)
அழுகுரல் ஒன்று மட்டும் காதில் கேட்டுப் போகிறது
அது துணைவியாருடையதுதான்," என்னை தனியா விட்டு போரிங்களை" என்று அழுகிறாள்.
கவலைப்படாதே சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே உனக்காக காத்திருப்பேன்.
ஊறார்,உறவினர் சூழ நாலு பேர் என்னை மாலையிட்டு தூக்கிச் செல்கிறார்கள் எங்கே?
ஓ அது தான் அகிலமும் அடங்கும் ஆறு அடி நிலம்.
ஆறு அடிக்குள் இறக்கி மூடி விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விட்டனர்....
அடுத்து பத்து நாளுக்குள் என் உடல் முழுவதும் ஒட்டுண்ணிகளாள் கபளிகரம் செய்யப்பட்டு ஏலும்புகளே மிஞ்சும் அதுவும் சில ஆண்டுகளில் மக்கிவிடும்......
இவ்வளவுதான் வாழ்க்கை இதில் கொடிய ஆயுதங்களான போட்டி, பொறாமை, பகை, கோவம், சண்டை ,சச்சரவு இவற்றை தூர ஏரிந்துவிட்டு அன்பு என்னும் ஆயுதத்தை மட்டும் பயன்படுத்தி வாழ்வை இனிமையாக்குவோம்...
நன்றி
எழுத்து: அந்தோணி ரெனிஸ்டன்
அலைபேசி:8754105540