வியாழன்

வியாழன்

இவள் புதனின் மகள்
வெள்ளியை மக்களுக்குப்
பெற்றுத் தரும் தாய்

இவள் செவ்வாய் வெள்ளி
பார்ப்பதுபோல் வேலை செய்ய
நாள் பார்ப்பதில்லை

இவள் கிழமை
யாருக்கும் கீழமை ஆவதில்லை

இவள் கிழமையை தன்
கண்ணிமையில் வைத்தாலும்
என்றும் கிழவி ஆகாதவள்

இவள் சிவந்திருக்கையில்
பகல் என்கிறோம்
கருத்ததும் இரவு என்கிறோம்

தான் ஒரு கிரகமாக இருந்தாலும்
யாருக்கும் மனிதனைப்போல்
கிரகம் கொடுப்பதில்லை

வியாழனுக்கு எப்போதாவது
வரும் வியாதி விடுமுறை

வியாழன்
இவள் நாளாகவும் பிறக்கிறாள்
கோளாகவும் இருக்கிறாள்

சமூக அவலம் கண்டு இவள்
த்தூ வெனத் துப்பும் எச்சில்
எரி கல்

இவள் சூரியானக் காதலித்து
கைப்பிடிக்கச் சுற்றி வருபவள்

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (1-Nov-18, 12:38 pm)
Tanglish : viyaalan
பார்வை : 231

மேலே