காதல் இதயம் நொறுக்காதே
சூரியகண்கள் கொண்டு பார்க்காதே....
இவள் பனிமலர் கண்கள் உருகிவிடும்.....
பட்டாசு வார்த்தைகளால் பேசாதே.....
இவள் மத்தாப்பு இதயம் பொறிந்துவிடும்.....
உன் வலுக்கரம் கொண்டுத் தள்ளாதே....
இந்த வளைகரத்தாள் உடையக்கூடும்....
சூறாவளிக் கோபம் கொள்ளாதே.....
இந்த மெல்லிடையாள் வாடக்கூடும்....
காதல் மட்டும் செய்.... இல்லையேல்
செய்வதுபோல் நடிக்க செய்....
பேதை அவள் அனைத்தையும்
உனக்காகச் செய்துவிடுவாள்......