துணிந்து நில் எதிர்த்து நில்

சொல்ல வார்த்தைகள் இல்லாமல் இருண்டு கிடக்கிறது மனது
காலம் போன போக்கில் போவதா இலைக்கு அடியில் பதுங்கும் மழைத்துளியாய் இருப்பதா
மருங்குகிறது மனது
கல்லுக்குள் ஒளியும் தேரை
கரைபுரண்டோடும் வெள்ளத்தை
எதிர்க்கக்தான் செய்கிறது
துணிந்து நில்! எதிர்த்து நில்
வெற்றி கிடைக்காமலா போய்விடும்
நிழல் தரும் மரங்கள்
பலன் எதிர்பார்த்தா
அடைக்கலம் தருகிறது
மனித மனங்கள் மட்டுமே
நொடிக்கொருதரம் மாறி
நோய் கிருமியாகின்றனர்
மனுநீதி சோழன்கள் யாருமில்லை
மதங்கொண்ட யானைகளை
மறவர்குல தோன்றல்களை
ஆர்த்தெழும் சூரியனை
கரம் நீட்டி பறிக்கத்தான் முடியுமா
மாறு மானிடனே மாறு
மாற்றம் மட்டுமே உன்னை
மாபெரும் சக்தியாய் வாழவைக்கும்
வா வாழ்ந்து காட்டலாம்!!!!

எழுதியவர் : உமாபாரதி (7-Nov-18, 12:23 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 795

மேலே