எவனோ..?

சில நட்சத்திரம் கடன்
வாங்கி வந்து
உன் பாத விரல்களில்
ஒட்டியவன் எவனோ..?
நீ போகும்
பாதையெல்லாம்
மின்னுதடி....
உலக மலர்களின்
வாசத்தை அள்ளி வந்து
உன் மேல் பூசியவன்
எவனோ...
நீ இருக்கும் இடம்
நந்தவனம் ஆனதடி.....
சில ஆசை மேல்
வைக்கச் சொல்லி
என்னை படைத்தவனும்
எவனோ....
சிங்காத காதலினை
உன்மேல்
நானும் கொண்டேனடி....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (7-Nov-18, 10:45 pm)
பார்வை : 65

மேலே