கடல் தாய்க்கு ஒரு கடிதம்

பொளர்னமி நிலவில்
பொங்கிவரும் கடல் அலைகள்
பொறுமை மிக்க நிலமகளை நாணத்துடன்
தழுவிச் செல்லும் கடல் அலைகள்

உன்னழகை காண எங்கள்
கண்ணிரண்டு போதாது கடல் மகளே
கவிஞர் போற்றும் தமிழ்
காவிய உலகின் தலை மகளே

கேட்டதெல்லாம் வாரி வாரி கொடுத்தவளே
கேட்காமல் எங்கள் உறவுகளை
மட்டுமிங்கே வாரிச் சென்றது ஏனோ?
வருதமென்ன எங்கள் மீதுனக்கு

இனி ஒருபோதும் வஞ்சிக்காதே
எங்களுக்கு வாழ்வு கொடுப்பவளே

எழுதியவர் : கருப்பசாமி (8-Nov-18, 12:51 am)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
பார்வை : 759

மேலே