வேரூன்றிடும் நிழல்

வேரூன்றிடும் நிழல்
எங்கோ எப்போதோ தோன்றிய நிழல் மறையும் இருட்டில் கூட தொடர்கிறதே
இது என்ன மாயமோ
நிழலே நீ என் நகல்
நான் அசைந்தால் அசைகிறாய்
நான் நின்றால் நீயும் நிற்கிறாய்
நான் அமர்ந்தால் அமர்கிறாய்
ஒளியில் தெரிகிறாய்
இருளில் தெரியாமல் போகிறாய்
கருநிறம் போர்த்தி நீ என்னோடு வருகையிலே வண்ணம் தீட்டி விட நினைப்பேனே
ஆனால் அது வேண்டாம் என்று விட்டு விடுவேனே
இது என்ன ஒரு விந்தையிலும் விந்தை
இது ஒரு வேளை கண்ணாடியோ
என்னை பிரதிபலிக்கிறதோ ?
எண்ணினேன் இது நம் பிரதிபலிப்பு
நம்மோடு எது இருந்தாலும் இல்லையென்றாலும் நம் பின்னே வரும் ஒரு தோழமை நிழல் தானே
அது நம் உறவல்லவோ
நாம் காட்டும் ஒவ்வொரு கோபமும் மகிழ்ச்சியும் அதுவும் செய்யும்
உணர்ச்சி கொண்ட உதிரமில்லா உயிர் அல்லோ
நிழலே நீ இல்லாமல் எப்படி ?
என்னை அறியாமல் என்னோடு பயணிக்கும் ஒரு பந்தம் நீ தானே என் உறவே என் நிழலே !

எழுதியவர் : பிரகதி (10-Nov-18, 12:45 am)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 73

மேலே