அவளும் தமிழும்

அவள் அழகில் அன்றலர்ந்த
செந்தாமரைப் பூ
அவள் அங்கம் தாமரை சிவப்பு
கண்களிரண்டும் தாமரை
சிவந்த பாதங்களிரண்டும்
செந்தாமரை - அவள் அழகே அழகு
அழகும் நாணும் அழகென்று நினைக்கையில்
அவள் பேசும் தமிழோ தேன்சிந்த
அதன் சுவையில் நாம் மயங்கிய வண்டானேன்
நினைத்தேன் அப்போது இவள் அழகை
மிஞ்சியது தமிழ்மொழி இவள் பேசும் மொழி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Nov-18, 9:11 pm)
Tanglish : avalum thamizhum
பார்வை : 246

மேலே