தினமும் கதை பேசுகின்றன
என் அத்தை மகள் பூப்பெய்து விட்டாள்..
அத்தையும் மாமாவும்
அளவில்லா சந்தோசம்
எனக்கு மட்டுமேனோ
கொஞ்சம் பைத்தியம்
குச்சலில் உக்காரவச்சு
கொழுத்த தீனி அவளுக்கு
எனக்கு மட்டுமேனோ
என்னைக்கும் போல வடிகஞ்சி
சாடை மாடையாய் நான்
சன்னல் வழி பார்த்தால்
வாடா மல்லியாய் அவள்
போடா என கோபிக்கிறாள்
இத்தனை நாள் ஒன்றாய்
இனிது விளையாடினோமே
இன்று மட்டும் ஏனோ உன்
ஒற்றை பல்லாங்குழி..
ஒரு மாசம் போய்விட்டது
அந்த பூவாசம் தொடங்கியது
என்னால் நம்ப முடியவில்லை
என்னவள் பேச்சில் கள்ளமில்லை
இப்போதெல்லாம் எங்கள்
விழிகள் மொழி பேசுகின்றன
கல்யாண நினைப்பில் அவை
தினமும் கதை பேசுகின்றன...