பெண்ணாகிய நான்
பெண் என்பவள் எப்போது முழுமை அடைகிறாள் என்னும் கேள்விக்குப் பல பதில்கள் உண்டு.அவள்"பெண்மை அடையும் போது,"தாய்மை அடையும் போது"அல்லது பேரக்குழந்தைகள் பெற்று வாழ்வு நிறையும் போது"என்றுப் பல பதில்கள்.ஆனால் உண்மையில் பெண் என்பவள் எப்போதுத் தான் விரும்பிய செயல்களைச் செய்துக்கொண்டு,பிடித்த வேலையைச் செய்துக்கொண்டு வாழ்கிறாளோ அப்போது தான் முழுமை அடைகிறாள்.ஆனால் அதிகமானப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் தேர்ந்தெடுப்பது அல்ல!பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.தன்னுடையக் குழந்தையால் தனக்குத் தகுந்தவன் யார் என்பததைக் கூடத் தேர்வுச்செய்ய முடியாது என நம்பும் பெற்றோர்கள் எப்படி அவள் திருமணம் செய்து பிள்ளைகள் ஈன்று குடும்பம் நடத்திடுவாள் என்று மட்டும் ந்மபுகிறீர்கள்?படிக்கும் பெண்கள் தங்களின் வாழ்க்கையின் அடுத்தக்கட்டமான இல்வாழ்க்கையில் ஈடுபடுவதற்குக் கன்னிப் பருவம் அடைந்திருந்தால் மட்டும் போதாது.தனியாக யார் துணையும் இல்லமல் வாழவும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.படிக்கும் வரை பெற்றவர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டோம்.திருமணம் ஆனதும் கணவன் பார்த்துக்கொள்வார்.இதற்கு மேல் என்ன வேண்டும் என்றுச் சிலர் கூறுகின்றனர்.பொதுவாகவே ஆண்கள் உடல் வலிமையோடும் பெண்கள் மனவலிமையோடும் படைக்கப்பட்டவர்கள்.அந்த மனவலிமை மிகுதியாக இருக்க வேண்டும் என்றால் தன்னால் தனித்துவாழ முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் அவளுள் வர வேண்டும்.அப்படி வர வேண்டும் என்றால் அவளுக்கப் பிடித்ததை அவள் செய்ய வேண்டும்.கணவனின் கால்களை மட்டும் சுற்றிவராமல் இந்த உலகத்தையும் அவள் சுற்ற வேண்டும்.தன்னுடையத் தனிப்பட்டத் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.இதனலனை உணர்ததவே இந்த கதைக்கலத்தை நான் அமைத்திருக்கறேன்.
என் பெயர் மதுமிதா.எனக்கு இப்போது வயது 23.அனைவரின் வீட்டிலும் இந்த வயதில் இருக்கும் பெண்ணிற்க்கு என்ன செய்வார்களோ அதயேதான் என் வீட்டிலும் செய்தனர்.ஆம்!திருமண ஏற்பாடு.டிகிரி படித்தப் பெண் நான்.எனினும் வேலைக்குச் செல்வதில் ஈடுபாடு அற்றவளாய் இருந்தேன்.அதற்காக நான் திருமணத்திற்க்குத் தயாராக உள்ளேன் என்று நினைத்து விடாதீர்கள்.என் மன ஏடுகளில் என் வாழ்க்கை முறை,வாழ்க்கையின் கடமை,வாழ நினைத்த வாழ்க்கை என அனைத்திற்க்கும் ஒரே பதில்தான் உண்டு."என் கனவு".வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே வாழ வேண்டும்.வித விதமான ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்துக்கொண்டு ஊர்ஊராகச் சுற்ற வேண்டும் என்பவனவெல்லாம் அல்ல. என் கனவு ஒன்றுமட்டும் தான்.ஓர் "எழுத்தாளராக" ஆகவேண்டும் என்பதுதான்.எம் தாய் மொழியாம் தமிழ்மொழியில் எனது பதிவுகளைச் செய்ய வேண்டும்.என்போல் தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்டு அங்கிகாரம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும்.என் சக்திக்கு அப்பார்ப்பட்டதாயினும் எம் தமிழ்மொழிக்காக நான் செய்ய வேண்டும்.இதுவே ஓர் தமிழ்ப் பெண்ணாய் நான் கொண்டுள்ள லட்சியம்,கனவு,கடமை எனக் கருதுகிறேன்.ஆனால் இவை அனைத்திற்கும் இந்தத் திருமணம் முட்டுக்கட்டையாக நின்றுவிடுமோ என்ற அச்சம் என் மனதின் முழுதும் நிறைந்திருக்கிறது.என்ன ஆனாலும் சரி.என் கடமை என்றும் நான் தவறேன்.வழக்கம் போல் உரைநடையாகவோ,கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ எழுதாமல் நாடக வடிவில் இந்தப் பதிவினை நான் அமைத்துள்ளேன்.புத்தகம் படிப்பதனால் நம்முடைய கற்பனைசக்தி அதிகரிக்கும் என்ற உண்மை ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே இப்படிப்பட்ட நாடக உரையாடலால் கதைக்களத்தை மிக சுலபமாக கற்பனை செய்துவிட முடியும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி.இந்த உரையாடல்களைப் படிக்கும் போது கற்பனைத்திறனை வளர்ப்பது மட்டுமல்லாமல் சொல்ல வருகின்றக் கருத்தினையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.வாருங்கள் உரையாடலைத் தொடங்கலாம்.
காட்சி 1:பெண் பார்க்கும் படலம்.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து அனைவரும் வந்து பெண் வீட்டின் நடு அறையில் அமர்ந்திருக்கின்றனர்.மாப்பிள்ளை,மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மற்றும் மாப்பிள்ளையின் தாய்மாமன்.அதேப் போல் பெண் வீட்டிலும் பெற்றோரும் தாய்மாமனும் அமர்ந்திருக்கிறார்கள்.யார் முதலில் பேசத் தொடங்குவதென்றுப் புரியாமல் அமைதிகாத்து அமர்ந்திருந்தனர்.மேலும் அமைதியை விரும்பாத மாப்பிள்ளயின் தந்தை தன் உரையை ஆரம்பித்தார்.
மாப்பிள்ளையின் தந்தை( மா.த): நமக்கு இந்த சுத்தி வலைக்கிற பேச்சுலாம் தெரியாதுங்க. அதுவுமில்லாம இப்படி பொண்ணு கேட்டுப் போறதும் இதுதானுங்க முதல்முறை.பையனுக்குக் கல்யாணம் பன்னலாமுன்னு முடிவெடுத்துத் தரகருகிட்டச் சொன்ன உடனே அவர் காட்டுன முதல் முகம் உங்க பொண்ணுதானுங்க.பாத்தோடனே புடிச்சுப் போச்சுங்க. நமக்கு என்னதான் புடிச்சிருந்தாலும் வாழப் போறது நம்ம புள்ளைங்கதானுங்க. அதான் ஒரு முறை நேர்ல பாத்துரலாமுன்னு வந்தோமுங்க.
இப்படி முன்னுரைக் கொடுத்தவுடன் வீட்டில் இருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.
பெண்ணின் தந்தை(பெ.த): இல்லையா பின்ன!நம்ப காலத்துல கல்யாணத்தின் போதுதான் ஒருவருடைய முகத்த இன்னொருவர் நல்லாவே பாத்தோம்.இப்போலாம் அப்படி இல்ல பாருங்க.தரகருகிட்ட எங்க பொண்ணோடப் படம் கொடுத்து ஒரு வாரம் தானுங்க ஆச்சு.தகுந்த இடமா பாத்துச் சொல்லுரேன்னு சொல்லிட்டுப் போனவரு உங்கள கூட்டிட்டு வந்திருக்காருங்க.
மாப்பிள்ளையின் தாயார்(மா.தா):பொண்ணு என்னங்க படிச்சிருக்கு?
பெண்ணின் தாயார்(பெ.தா):டிகிரி முடிச்சிருக்காங்க. எங்க வம்சத்துலயே முதல்ல டிகிரி படிச்சப் பொண்ணு எங்கப் பொண்ணுதானுங்க.முடிச்சி ஒரு வருஷம் ஆதுங்க.
மாப்பிள்ளையின் மாமன்(மா.மா):ஒரு வருஷம் ஆகுதுங்களா?வேலைக்கு எங்கேயும் போதுங்கலா?
பெ.த:(சற்று தடுமாறிய குரலோடு)வேலைக்கு எங்கேயும் போகலையுங்க.கல்யாணம் ஆனதுக்கப்புறம் மாப்பிள்ளை வீட்டுல சொன்னா போகட்டும்னு விட்டுட்டோமுங்க.படிக்கிற காலத்துலயும் அவ எங்ககூட இல்லாம ஹாஸ்டல்லத் தங்கிப் படிச்சாங்க.மறுபடியும் வேலைக்கு அனுப்பி பிரிச்சி வைக்க வேணாம்னு விட்டுடோம்ங்க.
இங்கு இப்படியெல்லாம் நடந்துக் டொண்டிருக்க..தன்னுடைய அறையில் அலங்காரம் செய்துக்கொண்டு காத்திருக்கும் கல்யாணப்பெண்ணாகிய மதுமிதா தன் வருங்காலக் கணவர் எப்படி இருக்கிறார் என்று கூடக் கவலைக்கொள்ளாமல் அவர் தன்னுடைய கனவிற்க்குக் கைக்கொடுப்பாரா?இல்லை கழுத்தறுப்பாரா?என்று எண்ணிப் பயந்து நடுங்கினாள்.
அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில் மதுமிதாவின் தங்கை மாப்பிள்ளையைக் குறுகுறுவென உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்.தன்னுடைய அக்காவின் முகத்தினை நினைத்துக்கொண்டு அவளருகில் மாப்பிள்ளையின் முகத்தினையும் நிறுத்தி ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்கிறதென்றுப் பார்த்தாள். கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவள் இருவரின் பொருத்தத்தையும் படம்பிடித்துக்கொண்டிருந்தாள்.பின்பு கண்களைத் திறந்து மாப்பிள்ளையைப் பாந்த்தாள்.அவரும் பார்த்தார்.அழகாக சிரித்துவிட்டு சம்மதம் தெரிவிக்கும் முறையில் தலையை அசைத்துக்கொண்டே அக்காவின் அறைக்கு ஓடினாள்.அவள் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே சிரித்துக்கொண்டார் மாப்பிள்ளை.
பெண்ணின் மாமன்(பெ.மா):பையன் பெயர் என்னங்க.
மா.த:கேக்குறாங்கள்ல சொல்லுடா!என்று புன்னகித்தார்.
மாப்பிள்ளை:கார்த்திக் சார்.ஐடி கம்பெணில வேலை பாக்குறேன்.பெங்களூருல போஸ்டிங் என்று புன்னகைப் பூத்துக்கொண்டேப் பேசினான்.
மா.மா:அப்பறம்! பொண்ண வரச்சொன்னீங்கன்னா பாத்துட்டு அடுத்த விஷயங்கல பேசீரலாம்.
காட்சி 2:அன்னை மகளின் உரையாடல்.
இடம்:மணமகள் அறை.
அக்காவின் அறைக்குச் சென்ற சத்யா மதுமிதாவின் அருகில் சென்று நின்றாள்.அக்கா!உனக்கு பெரிய அதிஷ்டம் தான் என்றாள்.அப்படி என்ன அதிஷ்டம் சத்யா?பின்ன! அவரு எவ்வோ அழகா இருக்காரு தெரியுமா?சிரிச்ச முகமா குழந்தை மாதிரி கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக்கிட்டு இருக்காரு.ஒழுங்கா இவரையே கல்யாணம் பன்னிக்கோ அக்கா!வழக்கம் போல உன் கனவு லட்சியம் பேசி பயமுறுத்திறாத சரியா?அப்பா உனக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சி ஒரு வாரம்தா ஆச்சின்னு சொல்லிருக்காரு.நீயா எதையாவது ஒளறிறாத.
பெ.தா:ஆமா மது!நீயா எதையும் சொல்லிடாத புரியுதா?உன்ன அழைச்சிட்டு வரச் சொன்னாங்க.வா போகலாம்.அப்புறம் நீயா அவங்க கூப்பிடுற வரைக்கும் தலையை நிமிர்த்தக் கூடாது.கேள்விக்கேட்டாப் பதில் சொல்லனும்.அப்புறம்...
மதுமிதா:அம்மா!நீ என்ன! நான் நல்லபடியா புகுந்த வீட்டுலப் போய் என்னோட அடுத்தக்கட்ட வாழ்க்கைய வாழ கல்யாணம் பன்னி வைக்கிறியா?இல்ல அவங்க வீட்டுல போய் ஒரு ஓரமா அலங்காரப் பொருளா இருக்கிறதுக்காக அவங்ககிட்ட வெல பேசக் கூட்டிட்டுப் போறியா?ஏதோ மூட்டப் பத்துரூபாய்கிற மாறி இப்படி நில்லு அப்படி நில்லுனு சொல்லிக்கிட்டு இருக்க. எனக்கு என்னத் தோணுதோ அதத் தான் நான் பன்னுவேன்.புடிச்சா கட்டிக்கட்டும் இல்லைனா போகட்டும்.எனக்கு ஒன்னும் இல்லை.
மதுவின் அன்னை:(வந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டு)அப்படி இல்ல மது.பெண் பாக்குறதுக்குன்னு ஒரு வரமுறை இருக்கு.அதுக்காகத்தான் சொல்றேன்.அம்மா சொன்னா கேளு மா!கீழப் பாரு மா..வா போகலாம்.
மதுமிதா அன்னையின் சொல்படி தலைகுனிந்து உதட்டில் இளம்புன்னகையோடு அன்னநடையிட்டுக் கொண்டு மெதுவாக நடந்து வந்து நின்றாள்.அங்கிருந்த அனைவரையும் வணங்கினாள்.கடைக்கண்களால் கார்த்திக்கின் திசைப் பார்த்தாள்.ஆனால் அடக்கம் என்னும் பெயரில் மதுவின் அன்னை பார்க்கச்சொன்ன உயரத்தில் கார்த்திக்கின் காலணிகள் மட்டும்தான் தெரிந்தது.
மா.தா:உன் பெயர் என்னம்மா.
மது: (அன்னை சொல்லிய அளவில் மட்டும் தலையை உயர்த்திப் புன்னகையுடன்)மதுமிதா.
மா.த:பொண்ண எங்களுக்குப் புடிச்சிருக்குங்க. என்னடா கார்த்திக் ?
நாணம் கலந்தப் புன்னகையுடன் கார்த்திக் சிரித்தான்.ஆனால் மதுவிற்கோ பதட்டமாக இருந்தது.அவரிடம் தன்னுடைய ஆசையைச் சொல்லிவிட வேண்டும் என்றுத் துடித்தாள்.தனியாக பேசச் சொல்லி அனுப்பினால் பரவாயில்லை.கடவுளே காப்பாத்தம்மா என்று மனதினுள் வேண்டினாள்.
மா.மா:காலம் மாறிப் போச்சுங்க.என்ன சொல்லவறேனா..சேத்துவைக்கிறது நம்பளாயிருந்தாலும் வாழப் போறது அவங்கதானே.கொஞ்ச நேரம் தனியா பேசவைக்களாம்னு தோனுது.என்னச் சொல்றீங்க மாமா.
மா.த:அது எப்படி நம்ம. அதெல்லா சரி வராது.
பெ.த:பரவாயில்லைங்க.பேசட்டும்.நம்ம எல்லோரும் இங்க தானே இருக்கப் போறோம்.பேசட்டுங்க. ஒருதரொருத்தர் தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே.அம்மாடி மது தம்பிய உள்ள கூட்டிட்டுப்போமா.
கார்த்திக் எங்கே தனது தந்தை மதுவிடம் பேசவிடாமல் செய்துவிடுவாரோ என்று மிகவும் பயந்தான்.நல்ல வேலையாக மதுவின் தந்தையே அனுமதிக் கொடுத்துவிட்டார்.மதுவை பார்த்தவுடன் இவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.அவளின் இளஞ்சிரிப்பு,நீளமான சடை,மெல்லிய இடை,காலின் கொலுசு,சாயம் பூசாத இழல்கள் என அனைத்தையும் ரசித்துப் பார்த்தான்.
காட்சி 3:மணமக்களின் சந்திப்பு
இடம்:மதுவின் அறை
தந்தை சொல்லிய அறைக்குக் கார்த்திக்கை அழைத்துச் செல்லாமல் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.உள்ளே நுழைந்த கார்த்திக் பிரம்மித்து நின்றான்.வழக்கமாக பெண்களின் அறை என்றால் அழகு சாதனப் பொருட்கள்,வகை வகையான ஆடைகள்,குட்டிகுட்டிப் பொம்மைகள் என்றுதான் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தான் கார்த்திக்.ஆனால் நமது மதுவின் அறையோ விசித்திரமாக இருந்தது.
உள்ளே நுழைந்தவுடன் கண்ணுக்கு நேரே குடும்பப்படம் மாட்டப்பட்டிருந்தது.நடுவே பஞ்சு மேத்தை இருந்தது.இடதுபக்கம் ஒருப் பெரியப் பலகை.பல அடுக்குகள் இருக்கும் பலகை.அந்த பலகை முழுதும் தமிழ்ப் புத்தகங்கள்.தலைவர்களின் வாழ்க்கை வரலாறு,சிறுகதைகள்,வரலாற்று நாவல்கள்,பலக் காகித நோட்டுகள் என நிரம்பிவழிந்தது.வலதுபக்கத்தில் பெரியாரின் புகைப்படமும் காமராஜரின் புகைப்படமும் மாட்டப்பட்டிருந்தது.அதன் கீழே ஒரு மேஜே இருந்தது.இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே மதுவின் கண்களை நேரே சந்தித்தான்.காதல் கொண்ட பார்வையால் அல்ல.குழப்பமும் கேள்விகலும் நிறைந்த பார்வையால்.மதுவிற்கு அவனுடையப் பார்வையின் அர்த்தம் புரிந்தது.
மது:ஏன் அப்படிப் பாக்குறீங்க? வழக்கம்போலதானே இருக்கு சுத்தமா.
கார்த்திக்:அது இல்லங்க. பொண்ணோட ரூம்னா எப்படி இருக்குமோ அதுக்கு அப்படியே எதிரால இருக்கு?
மது:அதப் பத்திப் பேசனும்னுதா உங்கள என்னுடைய ரூம்குக் கூட்டிட்டு வந்தேன்.வழக்கமா மத்தப் பொண்ணுங்கமாறி கல்யாணம் பன்னிக்கிட்டுப் புள்ளக்குட்டிங்களப் பெத்துகிட்டு அவங்கல படிக்க வச்சிக்கிட்டு சராசரி வாழ்க்கைய வாழ எனக்கு விருப்பமில்ல. எனக்கு எப்படி வாழனும்னு ஒரு ஆச இருக்கு.
கார்த்திக்:வேய்ட்..வேய்ட்..நீங்க ஏன் சராசரி வாழ்க்கைய வாழனும்.படிச்சிருக்கீங்க.அழகா வேலைக்குப்போய்டு ஜம்முனு இருக்கலாமே!உங்களுக்கு ஒரு வருமானம் .அந்தஸ்துன்னு இருக்கும்ல. நீங்க வேலைக்குப் போறதால எனக்கு எந்த ப்ராப்லமும் இல்ல. எப்படியும் நம்பலுக்கு ஒரு சப்போட்டா இருக்கும்.
மது:அதான்.இந்தமாறி வாழ்க்கையத் தான் நான் வாழ விரும்பலனு சொல்றேன்.
கார்த்திக்:இங்க பாருங்க மது.நான் குழந்த இல்ல. என்ன சொல்லனுமோ வெளிப்படையா சொல்லுங்க.
மது:என்னுடைய ரூம் பாத்தீங்கல்ல. இதோ! இங்க இருக்குற புத்தகம் மாறி நான் எழுதுற புத்தகங்களும் அடுக்கி வைக்கனும்கறது தான் என் ஆசையே.தமிழ் பொண்ணுன்னு சும்மா சொல்லிக்கிட்டு மட்டும் இருக்கக் கூடாது.அதுக்கேத்தாப்புல வாழ்ந்தும் காட்டனும்.என்ன மாறி தமிழ் மொழி மேல ஆர்வம் இருக்குறவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய செய்யனும்.அடுத்தத் தலைமுறைக்கு நம்முடைய மொழியோடப் பெருமைய புரியவைக்கனும்.இந்த மாறி நிறைய.கல்னாணம் பன்னிக்கிறதுனால எங்க என்னுடைய ஆச நிறைவேறாமப் போய்டுமோனு ஒரு சின்ன பயம்.எங்க அப்பா உங்ககிட்ட என்ன சொன்னாங்கன்னு எனக்குத் தெரியாது.ஆனா என்ன இதுவரைக்கும் மூனு பேர் பாத்துட்டுப் போயிருக்காங்க. எல்லாரும் இந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாங்க.காரணம் நான்தான்.இதோ இந்த ஆசதான்.இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு என்ன வேணாம்னு சொல்லிட்டுப் போய்டாங்க. ஆனா அப்பாகிட்ட இத என்னால சொல்லமுடியல.எதுக்காவும் என்ன என்னால மாத்திக்க முடியாது.இனி முடிவ நீங்கதான் சொல்லனும்.
கார்த்திக்:(அமைதியாக அவளின் அழகினை ரசித்துக்கொண்டு அவள் தன்னுடைய மெல்லியக் குரலில் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு நின்றான்)சரி.உங்களபத்திச் சொல்லிட்டீங்க. என்னப் பத்தி எதுவும் தெரிஞ்சிக்க வேண்டாமா?உங்களுக்கு என்னப் பிடிக்கனும்னு அவசியம் இல்லையா?உங்க அப்பா பன்னிக்கோன்னு சொன்ன செஞ்சிருவீங்களா?
மது:அப்படி இல்லங்க. இதுவர நான் இந்த ஆசைய சொன்னதும் இல்லன்னு சொல்லிட்டுப் போய்டுவாங்க. அதுக்கப்புறம் பேச எதுமே இருக்காது.எனக்கும் அதுக்கப்புறம் என்னப் பேசனும்னு தெரியலங்க.
கார்த்திக்:இப்பக்கூட என்னப்பத்தி நீங்க விசாரிக்கல.பரவாலங்க நானே சொல்றேன் கேளுங்க.பேரு கார்த்திக்.பெங்களூருல ஐடி கம்பெணில வேலை செய்யுறேன்.மாசம் 60000 சம்பளம்.கல்யாணத்திற்கு அப்புரம் என் மனைவி வேலைக்குப் போனும்னு அவசியம் இல்ல. அவங்களுடைய விருப்பதுக்கு நடுவுல நான் நிக்க மாட்டேன்.இதுவர யாரையும் காதலிச்சதில்ல.யாரும் என்னையும் காதலிச்சதில்ல. என்னுடைய ஆச லட்சியம் எல்லாமே என்னப் பெத்தவங்கள நல்லபடியா பாத்துக்கனும்றதுதான்.அது நல்லபடியா நடக்குது.இன்னொன்னு என்னுடைய மனைவி என் அம்மா அப்பாவ அவளுடைய பெற்றோரா பாத்துக்கனும் அவ்வோதான்.இதுவர எனக்கு வரப்போறவ இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு ஆச எனக்கில்ல. ஆனா இப்போ உங்கள மாறி ஒருத்தி என் மனைவியா வந்தா நல்லாயிருக்கும்னு தோனுது.யோசிச்சு சொல்லுங்க.
இதைச் சொல்லிவிட்டு அங்கிருந்து சிரிப்புடன் சென்றான் கார்த்திக்.அவன் எதையோ சொல்ல வருகிறான் என்று உன்னிப்பாக கவணித்தைக்கொண்டிருந்தவள் அவன் இறுதியாகச் சொன்னதைப் பளிச்சென்றுப் புரிந்துக்கொண்டாள்.அவருக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ந்தாளோ இல்லையோ! எப்படியோ தன்னுடைய கனவிற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்பதை நினைத்து ஆனந்தமடைந்தாள்.வெளியில் வந்தவனின் முகத்தினையே ஆர்வமோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.புன்னகைத்தழும்ப இருவரும் வந்ததைப் பார்த்து இரு வீட்டாரும் திருப்தி அடைந்தனர்.
மா.மா:பையனின் சிரிப்பப் பார்த்தால் பொண்ணக் கையோடக் கூட்டிட்டு வந்திடுவான் போலயே!என்னடா கார்த்திக் அப்போட செலெக்ஷன் எப்படி?
கார்த்திக்:பலே மாமா.நல்ல செலெக்ஷன்.
சரிங்க சார் நாங்க போய்டு தகவல் சொல்றோம்.இதுப் பையனோட ஜாதகம் பொண்ணோடது எங்கிட்ட இருக்கு.நீங்க எதுக்கும் ஒருமுற பாத்துக்கோங்கன்னு கார்த்திக்கின் தந்தை கூறினார்.இனியும் என்ன சார்ன்னு சொல்லிக்கிட்டு சம்மந்தின்னு உரிமையா சொல்லுங்கன்னு கார்த்திக்கின் மாமா கூறினார்.இவ்வாறு அனைவரும் சிரித்துக்கொண்டே பிரிந்துசென்றனர்.கார்த்திக் மதுவின் பார்வைக்காக ஏக்கத்தோடுச் சுற்றும்முற்றும் பார்த்தான்.எங்கோ கண்ணாடியின் வெளிச்சம் முகத்தின் மேல் பட்டுக் கண்கள் கூசியது.ஒளிவரும் திசையை பார்த்தான் அங்கு மதுவின் முகம் தெரிந்தது.நிலவினைப் பார்த்து ரசிக்கும் சிறுபிள்ளையென மதுவின் முகத்தினை பார்த்து ரசித்துக்கொண்டே வண்டியில் ஏறிச்சென்றான்.
காட்சி 4:திருமணம்
இடம்:திருமண மண்டபம்.
தன் ஆசைப்போலக் கணவன் அமைந்துவிட்டார் என்ற மனநிறைவுடன் தன் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தை எண்ணி கணக்கிட்டுக்கொண்டிருந்தாள் மது.கார்த்திக்கும் அதேப்போல் ஆவலுடன் காத்திருந்தான்.அப்போது மதுவின் தொலைபபேசிக்கு அழைப்பு வந்தது.
மது:ஹலோ!
கார்த்திக்:அடப்பாவி!இன்னும் என்னுடைய நம்பரை சேவ் பன்னலயா?
மது:ஆமா!எதுக்கு பன்னனும்.நீங்க யார் எனக்கு?எதுக்காக பன்னனும்.
கார்த்திக்:ம்ம்..பேசு...பேசு..இன்னும் கொஞ்ச நேரம்தான்.அப்புறம் நீ முழுசா எங்கிட்ட வந்துருவ.அப்ப பாத்துக்குறேன் உன்ன.
மது:அப்பையும் முடியாது.கல்யாணத்துக்கு அப்புறம் நீங்களே என் கண்ரோல்ல தான் இருப்பீங்க.
கார்த்திக்:(மனதினுள் ஆயிரம் ரோஜாக்கள் பூத்ததுபோல் இருந்தது)அதுவும் சரிதான்.நான் தான் உன்கிட்ட மாட்டிக்கப்போறேன்.
மது:கவலபடாதீங்க. உங்கள என் பிள்ளை போல பாத்துக்குவேன்.
கார்த்திக்:நானும் உன்ன என் அம்மா போல பாத்துக்குறேன்.
மணப்பந்தல் நோக்கி நடந்து வந்த மதுவின் கண்கள் தன் கணவனை சந்தித்தது.இருவரும் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வகையில் சிரித்துக்கொண்டனர்.
காட்சி:5 சந்தேகம்.
இடம்: இல்லம்.
பெரியோர்களின் ஆசிர்வாத்ததோடு இருவரின் மனமும் இனைய திருமணம் நடைப்பெற்றது.திருமணம் முடிந்தவுடன் பெங்களூரு அழைத்துச் சென்றான் கார்த்திக்.இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கண்மூடித்தனமான அன்பும் பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தனர்.வழக்கமாக குடும்பத்தில் வரும் சிற்சில சண்டைகள் இவர்களுக்கிடையிலும் வந்தது.மதுவிற்கு எழுத்தின் மீதிருந்த ஆர்வம் அவளைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று கார்த்திக் பயந்தான்.எனவே மது தன்னுடைய கதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் தன்னிடம் காட்ட வந்தால் அவள் மனம் நோகும்படி நடக்கத் தொடங்கினான்.
மது:ஏங்க! இதப் படிங்களேன்.இதுவர நான் குட்டிக்குட்டிக் கவிதைகள் கதைகள் தான் எழுதியிருக்கேன்.இப்போதான் 200 பக்கம் இருக்குறக் கதைய எழுதியிருக்கேன்.என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் புடிச்சிருக்குங்க. இதப் புத்தகமா போடலாம்னு சொன்னாங்க.நீங்களும் கொஞ்சம் படிச்சி எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
கார்த்திக்:நான் என்ன வேல பாத்துக்கிட்டு இருக்கேன்.இப்படி வந்து நடுவுல கைய விடுற.போய் உக்காரு ஓரமா.என் டென்சன் புரியாம.
மது:இல்லைங்க. உடனே பார்க்க வேண்டாம்.நேரம் இருக்குறப்ப பாருங்க. இங்க வச்சிட்டுப் போறேன்.
கார்த்திக்:கண்டிப்பா நான் படிக்க மாட்டேன் மது.கோவத்த ஏத்தாம படு போ.
கார்த்திக்கின் கோபம் வேலையின் மேல் உள்ள வெறுப்பாக இருக்கும் என நம்பினாள் மது.ஆனால் இதேப்போல் ஐந்தாறு முறை நடந்துவிட்டது.இனியும் பொறுத்துக்கொள்ள முடியாதென்று நேரே கேட்க முடிவுசெய்தாள் மது.
மது:ஏங்க! ஒரு நிமிஷம்.உங்ககிட்டக் கொஞ்சம் பேசனும்.
கார்த்திக்:நானும் பேசனும்.ஆனா இப்ப முடியாது.ஆபிஸ் போய்ட்டு வந்து வெளிய டின்னர் போலாம்.அங்க பேசிகலாம்.வறேன்.
காட்சி 6:மனக்கசப்பு
இடம்:உணவகம்.
மாலை இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாருத் தனக்கெனப் பதிவுசெய்திருந்த மேஜையில் அமர்ந்திருந்தனர்.சிறிது நேர மௌணத்திற்க்குப் பின்னர் கார்த்திக் பேசத் தொடங்கினான்.
கார்த்திக்:ஐயம் சாரி மது!நேத்து நீ எங்கிட்ட ஆசையா பேச வந்தப்ப நான் ரொம்ப கோவமா நடந்துகிட்டேன்.சத்தியமா நான் வேனும்னு தான் கோவப்பட்டேன்.
மது:(அதிர்ச்சியடைந்த மனநிலையோடு எரிச்சலாக)என்ன! வேனும்னு கோவப்பட்டிங்களா?இதப் பத்திதான் நான் கல்யாணத்திற்க்கு முன்பே சொல்லிட்டேனே?அப்படி இருந்தும் வேனும்னே கோவப்பட என்ன இருக்கு?
கார்த்திக்:நான் என்ன சொல்லவறேன்னு முழுசாக் கேளு மது.எனக்கு நீ...
மது:கேட்டவர போதும்.எவ்வோ சுயநலம் உங்களுக்கு.ஆச வார்த்தைப்பேசி என்னக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க. உன் விருப்பப்படி செஞ்சிக்கோன்னு சொன்னீங்க. ஆனா இப்போதானே உங்க உண்மையான முகம் தெரியவருது.எல்லாப் பொண்ணுங்க போல நானும் வீட்டுவேல செஞ்சுக்கிட்டு பாத்திரம் வெளக்கிக் கிட்டு கடைசிவர உங்க காலயே சுத்தி வரனும் அப்படிதானே?உங்கள நம்பி ஏமாந்து நிக்கிறேன்.
கார்த்திக்:அட!மது.உன்ன என்னோட அடிமையா இருக்கனும்னு இப்பக்கூட நான் சொல்லவே இல்லையே!எனக்கு நீ வீட்டோட இருக்குறதுலயோ இல்ல வேலைக்குப் போறதுனாலயோ எந்தப் பிரச்சனையும் இல்ல. என் மனசுல இருக்க விஷயம் வேற. அத எப்படி உன்கிட்டச் சொல்லுறதுன்னு எனக்குத் தெரியல.சரி விடு.இனி இதப் பேச வேணாம்.சாப்பிடு.நம்ம வீட்டுக்குப் போலாம்.
மது:எனக்குப் பசியில்ல.நீங்களே சாப்பிடுங்க.நான் கார்ல வேய்ட் பன்றேன்.
கார்த்திக்:நீயே சாப்பிடல. அப்ப நான் எப்படி.வா இரண்டு பேருமே போவோம்.
காட்சி:7 விரிசல்
இடம் :இல்லம்.
வீட்டிற்க்கு வந்த இருவரும் ஆளுக்கென்று ஓர் திசையைப் பார்த்தப்படி மஞ்சத்தில் அமர்ந்தனர்.மது எங்கே பேசத் தொடங்கிவிடுவாறோ என்று நினைத்து படுத்துவிட்டாள்.அவள் உறங்கவில்லை என்றும் அவளின் நம்பிக்கையை உடைத்துவிட்டோமென்றும் கார்த்திக்கிற்க்கு நன்றாகத் தெரிந்தது.எனவே அவளின் எண்ணம் தவறென்பதை உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்தான்.
கார்த்திக்:(மெதுவாக)மது..மது..நீ தூங்கலன்னு எனக்குத் தெரியும்.திரும்பி என்னப் பாரு மது.
மது:நான் தூங்கிட்டேன்.சீக்கிரம் நீங்களும் படுங்க.காலையில ஆபீஸ் போகனும்.
கார்த்திக்:நீ இப்படி இருக்கும் போது நான் எப்படி தூங்குறது.நீ தூங்கலன்னு எனக்குத் தெரியும்.உனக்கு கேக்க மனம் இருக்கோ இல்லையோ..ஆனா!நான் சொல்ல நினைச்சத சொலிலிட்றேன்.
மது:சொல்லுங்க. ஆனா நான் பதில் பேசனும்னு எதிர்ப்பார்க்காதீங்க.
கார்த்திக் மெதுவாக அவள் பக்கம் திரும்பி அவளின் கரங்களைப் பிடித்தான்.அவன் பிடிப்பில் ஓர் பாசமும் பயமும் தெரிந்தது.எனினும் எதையும் கண்பாராதவள் போல் அமைதியாக இருந்தாள் மது.
காந்த்திக்:மது.நீ என் வாழ்வில் வந்தது என் அதிஷ்டம்.உன்னைப் பார்த்தப் பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது.எப்போதும் நீ என் அருகில் என் நிழல் போல் இருக்க வேண்டும்.எனக்கு மனைவியாக மட்டுமல்ல! ஓர் தாயாக,தந்தையாக, நண்பனாக என் அனைத்தும் நீயாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு.
இதைக் கேட்டவுடன் சட்டென படுத்திருந்தவள் எழுந்தமர்ந்தாள்.
மது:அப்படியால் இத்தனை நாள் நான் உங்களோடு அப்படி நடந்துகொள்ளவில்லையா?காலை முதல் மாலை வரை எப்போதும் உங்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து இப்படி கூறினால் என்ன அர்த்தம்.
கார்த்திக்:அதைத்தான் நானும் சொல்கிறேன் மது.இப்படி இத்தனைக்காலமும் என்னுடன் என் நிழல் போல் சுற்றித்திரியும் நீ எங்கே என்னைவிட்டு விலகிச் சென்றுவிடுவாயோ என்ற பயம் தான் எனக்கு.நாளையே நமக்குப் பிள்ளைகள் வந்துவிட்டால் நீ அவர்களோடு முழுநேரமும் இருக்கக்கூடும்.பின்பு என் நிலை என்ன?
மது:நீங்கள் பயம் கொள்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? யார் வீட்டிலும் நடக்காததா நமது வீட்டில் நடக்கப் போகிறது.உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ மறைக்காமல் அதை மட்டும் சொல்லுங்கள்.
தன்னைப் புத்தகம் எழுத வேண்டாம் என்று தடுத்ததற்கும் இப்போது காரணம் கூறியதர்க்கும் ஒற்றுமை இல்லை என்பதை மது கவனித்தாள்.கார்த்திக் மனதில் வேறொன்றை வைத்துக்கொண்டுத் தன்னிடம் மறைக்கிறார் என்பதை அவள் புரிந்துக்கொண்டாள்.தலையைத் தாண்டியும் வந்தக் கோவத்தை அடக்கிக் கொண்டு நிதானமாக கார்த்திக்கின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.நல்ல வேலையாக அவளே என்னென்றுக் கேட்டுவிட்டாள்.மனதில் இருப்பதைச் சொல்லிவிட வேண்டும் என முடிவுசெய்துப் பேசத் தொடங்கினான் கார்த்திக்.
கார்த்திக்:மது.நான் சொல்றது சின்னப்பில்லை போல இருக்கலாம்.ஆனா!..(பெருமூச்சுடன்)நான் வெளிப்படையாவே சொல்றேன் மது.நாளைக்கே நீ புத்தகம் எழுதி பெரிய ஆள ஆகிட்டனா எங்கிட்ட இருந்து விளகிடுவியோனு பயமா இருக்கு.பேரு புகழ்னு உன்ன வந்து குமியும்.அந்நேரத்துல என்னால உங்கூட சகஷமா பழக முடியும்னு எனக்குத் தோனல. அதுனால இந்த புத்தகம் எழுதுறதெல்லாம் வேணாம்.உனக்குனு ஓர் அங்கீகாரம் ஓர் பக்கபலம் வேணும்னா தாராளமா வேலைக்குப் போ.ஏன் நான் என்னோட ஆபீஸ்லயே வாங்கித்தர்றேன்.அதுதான் சரி.இந்த எழுத்தாளர் ஆகுறது..புரட்சிசி பன்றது இதெல்லாம் நமக்கு சரிவராது மது.
மது:இதோ பாருங்க.நான் புக் போடப்போறேன்னு தானே சொன்னேன்.அதுக்குள்ள என்னென்னமோ சொல்றீங்க. இது என்னோட கனவு,ஆச. பொண்ணு பாத்துட்டுப் போறப்ப என்னுடைய மனைவி ஆசைக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன்னு சொன்னீங்க. இப்போ இப்படி சொன்ன என்ன அர்த்தம்.அதுமட்டுமில்லாமல் அதுக்கெல்ல நீங்க சரின்னு சொன்னதுனாலதான் நான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்.இப்போ இப்படி சொன்ன என்ன அர்த்தம்.
கார்த்திக்:(கோவமாக) இப்பச் சொன்னபாரு.அதுக்கு ஒத்துக்கிட்டதுனாலதா கல்யாணத்திற்க்கு ஒத்துக்கிட்டேன்னு.எனக்கு உன்ன பாத்தோடனே புடிச்சிப்போச்சு மது.எங்க அம்மாகிட்ட நீ சமஜமா பழதுறத பாத்து எனக்கு ஒரு நம்பிக்க வந்துச்சு.நீ என் வீட்டுக்கு வந்தா கண்டிப்பா எந்தவித பிரச்சனையும் இல்லாம இப்ப டோலவே எப்பையும் இருக்கும்னு நம்புனேன்.அதே மாறிதான் இப்பவர இருக்கு.என்னைக்கும் உனக்கு இந்த கனவப்பத்தின நெனப்பு வறாம இருக்கனும்னுதான் அடிக்கடி உன்ன வெளியில கூட்டிட்டுப்போய் என் காதல உனக்குப் புரியவைக்கனும்னு நினச்சேன்.ஆனாலும் உன் மனசு முழுசா அதவிட்டு வரமாட்டேங்குது.பிலீஸ் மது .என்னப் புரிஞ்சிக்கோ.நமக்கு இதெல்லாம் வேணாம்.
கார்த்திக் பேசிய அனைத்திலும் இருக்கும் காதலை மது பார்க்கவில்லை.தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தாரைப்பற்றியும்தான் அவர் அதிகமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து மனம் நொந்துப் போனாள்.தன்னுடைய ஆசை, கனவுகளுக்கு அவர் எந்தவித முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என எண்ணி வருந்தினாள்.
மது:என் கனவுக்காக நான் எத்தனை இழப்புகளையும் அவமானங்களையும் சந்திச்சிருக்கேன்.எத்தனை தியாகத்தப் பன்னிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.எப்படி சட்டுனு உங்களால இப்படிலாம் பேச முடியுது.நீங்க சந்தோஷமா இருக்கனும்னு என்னென்னமோ யோசிக்கறீங்க. ஆனா என் சந்தோஷத்தப் பத்தி உங்களுக்கு அக்கறை இல்லையாங்க. கடைசி காலம்வரைக்கும் இந்த ஆசையை மனசுல சுமந்துக்கிட்டு ஏக்கத்தோட நான் வாழனும்.அதுதானே உங்க ஆச.
கண்ணீருடன் பேசிய மதுவை ஆருதல் கூடச் சொல்ல மனமில்லாமல் அவளின் அழுகையைப் பார்த்து வருந்திக் கொண்டிருந்தான்.இனியும் பேசிப் பயன் இல்லை என்று முடிவு செய்து போர்வையை இழுத்துத் தன்னை மூடிக்கொண்டு உறங்கினாள்.
காட்சி 8:மதுவின் கோபச்செயல்.
இடம்:இல்லம்.
மறுநாள் காலையில் எழுந்து என்றும்போல் இல்லாமல் அனைத்தையும் தானாகவே செய்து முடித்தாள்.இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் கண்கள் சிவந்து இருந்தது.நடையில் களைப்புத் தெரிந்தது.கையில் தேநீர் எடுத்துக்கொண்டு கார்த்திக்கை எழுப்புவதற்காகச் சென்றாள்.
மது:காபி.
கார்த்திக்:(மெதுவாக எழுந்து)மது என் முகம் கூடப் பார்க்க விரும்பவில்லையா?இன்னும் என் மீது கோவம் இருக்கிறதா?
மது:மணி 7:30.வெந்நீர் வச்சாச்சு.சீக்கிரம் குளிங்க.சட்டை பீரோவில் இருக்கிறது.நான் சமைக்கப் போறேன்.
அவளின் கோவம் சீக்கிரமாகக் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை கார்த்திக்கிற்க்கு இருந்தது.எனவே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல் ஆபீசுக்குக் கிளம்பினான்.
மது:(வழியனுப்பச் சென்றவள் அவன் முகம் பாராமல்)பாத்துப் போய்ட்டு வாங்க.
கார்த்திக்:(சிரித்துக்கொண்டு)சீக்கிரம் வரப் பாக்குறேன்.நீ பாத்து இரு.
மனதினுள் அன்பு கொட்டிக்கிடந்தாலும் வெளியில் காட்டமுடியாமல் ,எங்கேக் காட்டினால் அதுவே விஷமாய் மாறிவிடுமோ என்று மிகவும் பயந்தான் கார்த்திக்.தான் சொல்லவந்ததைத் தவறாய்க்கூறி அவளின் மனதைக் காயப்படுத்திவிட்டுட்டோமோ என்று சிந்தித்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.மதுவின் எண்ணமும் இதேப்போல் இருந்தது.எனினும் தன்னுடையக் கனவை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்து நினைத்துத் தன்னைத்தானே தனிமைக்குத் தள்ளினாள்.அப்போது அங்கு ஒருவர் வந்தார்.
மா.தா: என்னமா மது.நான் உள்ளே வந்ததைக்கூடக் கவணிக்காமல் எதையோ யோசிச்சிக்கிட்டே இருக்க.
மது:(புன்னகையுடன்) அதெல்லாம் இல்லைங்கத்த. நீங்க எப்போ உள்ள வந்தீங்க. உக்காருங்க வாங்க.
மா.தா:எங்கமா கார்த்திக்?நான் வறேன்னு சொன்னனே.உன்கிட்ட அவன் சொல்லலையா?
மது:அவர் வேலைக்குப் போயிருக்காரு அத்தே.நீங்க சாப்டிங்களா?வாங்க!முதல்ல சாப்பிடலாம்.
இருவரும் ஆனந்தமாக சிரித்துப்பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதை கவணிக்கவில்லை.மாலை நேரம் ஆனதும் கார்த்திக் வீட்டிற்கு வந்தான்.தன்னுடைய அன்னையைப் பார்த்ததும் ஆனந்தத்தில் நெகிழ்ந்தான்.அன்று ஓர் நாள் இருவரும் தங்கள் இருவருக்குள் இருந்த கசப்பான வாக்குவாத்ததை மறந்து சிரித்து மகிழ்ந்தனர்.இரவு கார்த்திக்கின் அன்னை அங்கிருந்துக் கிளம்பினாள்.
மா.தா:(மதுவைத் தனியாக அழைத்து)அம்மாடி மது.நீங்க இரண்டுபேரும் இப்படி சந்தோஷமா இருக்குறதப் பார்த்தா எனக்கு ரொம்ப திருப்தியா இருக்குமா.நீ எங்கே உன்னோடக் கனவுதான் முக்கியம்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன்மா.கார்த்திக் உன்னப் பொண்ணு பாத்துட்டு வந்ததும் உன்னுடைய ஆசயெல்லாம் எங்ககிட்டச் சொன்னான்.அதப் பத்தி நானும் மாமாவும் உங்க அம்மா அப்பாகிட்டப் பேசுனோம்.
காட்சி 9:அவர்கள் பேசிக்கொண்ட உரையாடல்
இடம்:மதுவின் இல்லம்.
பெ.த:(பதற்றத்துடன்)என்ன சம்மந்தி இப்போதான் போனீங்க. அதுக்குள்ள வந்திருக்கீங்க. எதாவது பிரச்சனையா?
மா.தா:மது இருக்காளாங்க. உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசனும்.
பெ.தா:இல்லைங்க. அவ நீங்கப் போனதும் தன்னுடையத் தோழிகளைப் பாக்குறேன்னு கிளம்பிட்டாங்க. என்ன ஆச்சுங்க.
மா.தா:(மதுவின் கனவினை அவள் கார்த்திக்கிடம் கூறியதை இவர்களிடம கூறினாள்)பாருங்க உங்கப் பொண்ண எங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குங்க. என்னுடையப் பையன் கல்யாணம் பன்னிக்கிட்டா உங்கப் பொண்ணத்தான் செஞ்சுக்குவேன்னு சொல்லிட்டான்.அதெல்லாம் சரி தானுங்க. ஆனா பாப்பா நனைச்சிக்கிட்டு இருக்குறக் கனவுலாம் நம்ம குடும்பத்துக்குச் சரிபட்டு வராதுங்க. ஏதோக் கடவுளோட ஆசிர்வாதத்தால நம்ம இரண்டு பேரோடக் குடும்பமும் சகல வசதியோட இருக்கோம்.மது அப்படியே வீட்டோட இருந்துக்கிட்டு பிள்ளைகள நல்லபடியா பாத்துக்கிட்டு இருந்தா நல்லா இருக்கும்.நீங்க உங்க பொண்ணுக்கிட்ட இதப் பத்திப் பேசுனா நல்லாயிருக்கும்.
பெ.த:அடடா..இதுதானாங்க.நான்கூட என்னமோன்னு நினைச்சி பயந்துட்டேன்.அவ சின்னப் பொண்ணுங்க. ஏதோ புத்தகங்களப் படிச்சிட்டு அவ இப்படிச் சொல்லிட்டுத் திரியுறா.கல்யாணம் ஆகிடுச்சினா அவளே இதெல்லா மறந்திருவாங்க.நம்ம இத அவகிட்டப் பேசப் போனாதான் எதாவது பிரச்சனை வரும்.இத இப்படியே விட்டுறலாம்ங்க.
மா.தா:அதானுங்க என்னுடையப் பையனும் சொன்னான்.இருந்தாலும் தெளிவா பேசிக்கிட்டப் பிரச்சனையில்லப் பாருங்க அதான்.அப்போ நான் வறேனுங்க.
காப்சி 10: மதுவின் முடிவு
இடம்:பெங்களூரு இல்லம்.
இதைக்கேட்டவுடன் மதுவிற்கு உயிரேப் போய்விட்டதைப்போல் இருந்தது.இதை கார்த்திக்கின் அன்னை மதுவிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார்த்திக் அங்கு வந்தான்.மதுவின் முக மாறுதல்களைக் கார்த்திக் உணர்ந்தான்.
கார்த்திக்:அம்மா.என்னம்மா சொல்லிக்கிட்டு இருக்க. இப்போ இதெல்லாம் முக்கியமா.வண்டிக்கு நேரம் ஆச்சு.முதல்ல கிளம்பு வா.
கார்த்திக்:மது நீயும் வா.
ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற வலியில் அவள் கண்கள் ஆறுபோல் நீர் நேங்கி இருந்ததைக்கண்டக் கார்த்திக் எதையும் சொல்லாமல் தன்னுடைய அன்னையை அழைத்துக்கொண்டுப் பேருந்து நிலையத்திற்குச் சென்றான்.
அன்னையை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு வந்தவன் மதுவிடம் எப்படி முகம் கொடுத்துப் பேசுவது எனத் தயங்கி தயங்கி உள்ளே வந்தான்.
கார்த்திக்:மது.அம்மா சொன்னது என்னமோ உண்மைதான்.ஆனா உன்ன ஏமாத்தனும் உன் ஆசைய உடைக்கனும்னு நினைச்சி இதெல்லாம் பன்னல. எங்க இருக்க நீ?பேசு மது.அமைதியா இருக்காத.மது..மது...
மதுவைத் தேடிச்சென்றவனுக்கு அவள் எழுதி வைத்திருந்தக் கடிதமே கைக்குக் கிடைத்தது.பதற்றத்தில் கைக்கால்கள் நடுங்கின.தைரியத்தை வரவைத்துக்கொண்டு கடித்ததைப் படித்தான்.
அன்புள்ள....இதை எழுதுவதற்க்குக் கூட யோசனையாக இருக்கிறது.அன்பு இருந்திருந்தால் இப்படி ஓர் முடிவை நீங்கள் அனைவரும் எடுத்திருப்பீர்களா?பெண் என்றால் கடைசிகாலம் வரை ஆசைகளை உள்ளே வைத்துப் புதைத்துக்கொள்ள வேண்டுமா?ஏன்!நாங்கள் கொள்ளும் ஆசைகளெல்லாம் நிறைவேறாதா? நான் அப்படி என்னக் கனவை கண்டுவிட்டேன்.நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி வெறுக்கும் அளவிற்கு.பெண்கள் சுதந்திரமாய் தனக்கென ஓர் வேலை ஓர் அக்கிகாரம் எனத் தானாக ஏற்படுத்திக்கொண்டு வாழும் இந்தக் காலத்தில் குடும்பத்தின் மீது நான் அன்பு கொண்டு அவர்களைக் காயப்படுத்த வேண்டாம் என எண்ணியது தவறா? இனியும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.நான் என் கனவைத்தேடிப் போகிறேன்.தடுக்க நினைத்த உங்கள் அனைவருக்கும் முன்னால் நான் வாழ்ந்து காட்டுகிறேன்.வருகிறேன்.
- மது
கார்த்திக்:(கண்களில் கண்ணீர்;மனதில் ஓர் ஆதங்கம்;பொக்கிஷத்தை இழந்தத் துடிப்பு)ஐய்யோ!மது.என்னைவிட்டுச் சென்றுவிட்டாயா நீ?ஒரு முறை நீ என்னுடன் சண்டைப்போட்டுக்கொண்டுக் கோவித்துக்கொண்டிருந்தால் இதைப்பற்றி நாம் பேசியிருந்திருக்களாமே.உனக்கு நான் புரியவைத்திருப்பேனே.எல்லாம் என் தவறுதான்.மது!உன்னைவிட்டு நான் எப்படி இருப்பேனடி!போனவள் என் உயிரையும் எடுத்துக்கொண்டுப் போயிருக்கலாமல்லவா!
கார்த்திக்கை விட்டுப் பிரிந்து சென்ற மது தன்னுடையக் ஆசையையும் கனவையும் உண்மையாக்குவதற்காகப் பலத் தடைகளைக் கடந்து பல இன்னல்களை சந்தித்து வெற்றியும் கண்டாள்.ஆனால் மணம் ஏற்படுத்திக் கொடுத்த மனபந்தத்தை அவளால் மறக்க முடியவில்லை.எனினும் திரும்பிச்சென்றால் பழைய மனதோடுத் தன்னை ஏற்றுக்கொள்வார்களோ என்ற பயமும் இருந்தது.மதுவின் "பெண்ணாகிய நான்" என்றப் புத்தகம் நல்ல கருத்துக்களைப் பெற்றது.அதனால் அவளை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பேட்டி எடுப்பதற்காக அழைத்தார்கள்.
காட்சி 11:மதுவின் வெற்றி
இடம்:தொலைக்காட்சி நிறுவணம்.
தொலைக்காட்சி நிபுனர்:வணக்கம் மது.அதாவது மதுமிதா.உங்க உண்மையான பெயரே அழகா இருக்கும்போது ஏன் வெளியுலகிற்க்கு வேறு பெயர் பயன்படுத்துறீங்க.
மது: மதுமிதா அழகான பெயர்தான்.ஆனா நான் இந்த உலகத்தோடத் தொடர்புகொள்ளப் புது ஆளா மாறனும்னு நினைச்சேன்.என் கடந்தக்கால வாழ்க்கைய நினைவூற்ற எந்த விஷயமும் எங்கிட்ட இருக்கக் கூடாதுன்னு தோனுச்சு.அப்போத என்னால நான் எதுக்காக என்னைச் சார்ந்தவங்கள விட்டுட்டு வந்தனோ அத நிறைவேத்த முடியும்னு தோணுசு.அதுக்காகத்தான் இந்தப் பெயர் மாற்றம்.நல்லாதானே இருக்கு இந்த "தமிழ் இரத்தம்" பேரு.இதச் சொல்லும்போதே எனக்கு இந்த உலகத்து மக்கள்க் கூட ஒர்த் தொடர்பு இருக்குறமாறி உணர்றேன்.
நிபுணர்:நீங்க சொன்னீங்க உங்கள சார்ந்த எல்லார்கிட்ட இருந்தும் விலகி இருக்கீங்கன்னு அது யாரு?
மது:என்னுடைய நெத்தியையும் கழுத்தையும் பார்த்தாலே நான் கல்யாணம் ஆனவன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.நான் இப்போ பெருசா நினைகிற உறவு என் கணவர்தான்.கனவுக்குத் தடையா இருந்த தடைகள தகர்த்துப் பயணத்தத் தொடரனும்னு சொல்லுவாங்க. அப்படி தகர்த்து வந்த ஓர் தடை தான் என் கல்யாணம்.
நிபுணர்:தடைகள கடந்து வந்து சாதிச்சிருக்கீங்க. அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.ஆனா எந்தத் தமிழ் பெண்ணும் செய்யத் துணியாத காரியத்தத்தானே நீங்க செஞ்சிட்டு வந்திருக்கீங்க.
மது:தமிழ் பொண்ணுன்னு நிருப்பிக்கிறதுக்கு எத்தனையோ வழி இருக்குங்க. எனக்கு இப்போ வயசு 25.நான் நினைச்சிருந்தா மார்டன் டிரஸ்ல வந்திருக்கலாம்.முடியைக் கட்டாமல் அப்படியே விட்டுருக்கலாம்.அவ்வளவு ஏன்?இந்தத் தாலியைக்கூட கலட்டி வச்சிட்டு வந்யிருக்கலாம்.ஆனா நான் அப்படி எதுவுமே பன்னலயே!இப்பவர என் கணவன் உடன் ஏற்பட்டப் பந்தத்த மதிக்கிறேன்.என் பெற்றோர்கள் நல்ல முறையில என்ன வளர்த்திருக்காங்கன்னு காட்ற முறையில ஆடைகள் அணிந்திருக்கேன்.நான் கற்ற கல்விக்கும் பிறந்த மண்ணிற்க்கும் மரியாதை கொடுக்கும் முறையில என் பணியைத் தேர்ந்தெடுத்து பன்னிக்கிட்டிருக்கேன்.நான் தமிழ்பெண் தானே.
நிபுணர்:சரிதாங்க! ஆழமான கருத்த அழகாச் சொன்னீங்க. ஒரு தனிப்பட்டக் கேள்வி கேட்கலாமா மது?
மது:தாராளமா கேளுங்க.
நிபுணர்:இப்போ ஒருவேல உங்க கணவர் உங்கள ஏத்துக்குறேன்னு சொன்னா என்னப் பன்னுவீங்க?
மது:இப்படி ஒரு சம்பவம் நடக்காதானுதான் இப்போவர காத்துக்கிட்டிருக்கேன்.இனியும் காத்துக்கிட்டுருப்பேன்.வணக்கம்.