மனிதனின் இலக்கு
பணம் தான் இன்று மனிதனின் இலக்கு
செய்யும் தானம் கூட பகட்டாய் இருக்கு
குணமெல்லாம் தினமும் குப்பையாய் கிடக்கு
குடிகாரனுக்குத் தானே உலக அரசே இருக்கு
விளைவிப்பவன் வாழ்க்கை இருட்டாய் இருக்கு
விலைவைப்பவன் பேரோ ஒலிப்பாய் இருக்கு
பஞ்ச பூதம் எல்லாம் விலையேறிப்போச்சு
பஞ்சபாதகம் மட்டுமே அரசாங்கம் ஆச்சு
எல்லாத்தையும் நாம்தான் எண்ணிட வேண்டும்
ஏதாவது செய்து இதை மாற்றிட வேண்டும்
புள்ளினம் போல நாம் இருந்துவிட்டாலே - இந்த
பூலோகம் ஒருநாள் அழிந்தே போகும்.