மாவீர்கள்

தமிழ்க் கருவறைகள் மீண்டும்
உங்களைச் சுமக்கும்

இதயங்களை ஒன்றிணைத்து
எழுப்புவோம் மாவீரர்களை

அமைதியாக உறங்கும்
ஆயிரம் கரங்கள் அங்கிருக்குது

உங்கள் மரணத்தில்
நாங்கள் பிறப்பு கண்டோம்

ஒழுக்கத்தை உயிருக்கு
மேலாக மதித்து
ஒழுக்கமாக வாழ்ந்த
வீர காவியம்
நீங்கள்

விழிகளைத் தோண்டி
விரல்களை
வெட்டி வீழ்த்தி வீரம்
புகட்டிய
ஈழம் தியாகத்தின் சிகரங்கள்
நீங்கள்

துப்பாக்கி நீங்கள் சுட்டாலும்
சுடுமென்று
துரோகிகளுக்கு உணர்த்திக்
காட்டியவர்கள்
நீங்கள்

பாலியல் வன்முறை
புரிந்த பாவிகளுக்கு
கைகளை உடைத்து
புத்தி புகட்டியவர்கள்
நீங்கள்

கவலை கொள்ள வேண்டாம்
கல்லறையில் இன்னும் சில நாள்
இப்படியே உறங்கிடுங்கள்

இனியும் நீங்கள் எங்களுக்காய்
உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்
நிம்மதியாய் உறங்குங்கள்

தமிழனாய் மீண்டும் தலை நிமிர்வோம்
தன்மானத்தோடு மீண்டும் உயிர்பெறுவோம்
உங்கள் ஆசிர்வாத்துடன்

உங்களின் தியாகத் தீயில்தான்
இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்

எழுதியவர் : இதயம் கலந்த நிலவுகள் வினோ (18-Nov-18, 2:12 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
பார்வை : 689

மேலே