கிராமிய செழிப்பு கட்டுரை

மிக அழகிய சூழல் , அன்பான மக்கள்
பார்க்கும் இடமெங்கும் பசுமை,
நன்னீர் ஊற்று கொண்ட ஆழமான கிணறுகள்
வீட்டு விலங்குகளும், பட்டி தொட்டிகளும் ,
எங்கும் பறவைகளின் இனிமையான குரலும்
இதமான காற்றும், மனதை வருடி கொள்ளும்.

இத்தகைய ரம்மியமான சுற்றாடலில் அரண்மனை மாதிரி மிகப் பெரிய வீடு
அந்த வீட்டை சுற்றிலும் சொந்த பந்தங்களின் வீடுகளும் தோட்டங்களும் பயிர் பச்சைகளும் ,
நாங்கள் பட்டணத்தில் பார்க்கவோ அனுபவிக்கவோ இயலாத நல்ல பழக்க வழக்கங்கள்
அங்கு வாழும் மக்களிடையே தோன்றுகிறது .
அவர்கள் மனமோ சுத்தத்திலும் சுத்தம்
அங்கு வாழும் அத்தனை மக்களும் பத்தரைமாற்றுத் தங்கங்கள்,
நாங்கள் அவர்களிடம் இருந்து படித்துக் கொள்ள வேண்டிய அனுபவங்கள் நிறைய உண்டு .
நாமும் அவர்களின் நல்ல குணநலன்களை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால்
நம் நாட்டில் பண்பும் வளமும் தழைத்தோங்குமே என்ற நப்பாசை எங்கள் மனங்களில் .
அக்கிராமத்து மக்களின் சமையலும் உணவுமுறைகளும் , அவர்களின் உணவு பரிமாறும் பண்பும்
எங்களை மென்மெலும் கவர்ந்தன.

பட்டணந்தான் போகலாமடி பொம்பிள பணம் காசு தேடலாமடி
என்ற பாடல்தான் மனதில் தோன்றியது
பணம் மட்டும் போதாது வாழ்க்கைக்கு
பண்பும் , நேர்மையும் கூட இருக்கவேண்டும்
கிராமத்தில் உள்ள பாசங்கள், ஏக்கங்கள், உதவிடும் பக்குவங்கள்
பட்டணத்தில் பார்ப்பது மிக அரிது .
என்ன இருந்தாலும் நாம் பிறந்த ஊர் கிராமமல்லவா
அதை நினைத்து நம்மை நாமே மெச்சிக் கொள்ள வேண்டும்
இங்கிருந்து பார்க்கும் போது அது குக்கிராமம்தான்
எங்கள் மனங்களில் அது மாபெரும் சொர்க்க பூமியே

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Nov-18, 4:19 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே