தொலைக்கட்சித் தொல்லைகள்

தொலைக்காட்சித் தொல்லைகள்
*******************************************************

தொலைகாட்சி விளம்பரமே வாழ்வென்ற கற்பனையில்
எல்லையில்லாக் கனவுகளில் மேவியே நின்றிடுவார்
கிள்ளைக்கே பாலிடாது சள்ளைத்தொடர் நோக்கிடுவார் --கொடும்
தொல்லைக் காட்சி ஆனதுவே நம்மவரின் இல்லங்கள் !

தொடரோ கால்பங்கு விளம்பரமோ முக்காப்பங்கு
விடுகதையில் மூழ்கிடுவார் படரும்தொடர் முடிவறிய
அடுக்களைப் பணிகட்கு நேரமில்லை இவர்கட்கு --இதைத்
தடுக்க வழியொன்றை யாரறிவார் பராபரமே !

(சமூக விழிப்புணர்வுக்காக )

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Nov-18, 8:17 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 80

மேலே