அம்மா

என்ன தவம்
செய்து

எனைப் பெற்றாள்

என் அம்மா

எனக்கது தெரியாது

சொல்லக் கேள்வி

தவமாய் தவமிருந்து
என்று

அவளுக்கு நான்
வரம்

எனக்கோ அவள்
தான் உலகம்

உள்ளங்கையில்

எனைத்தாங்கினாள்

உறங்க தாலாட்டு
பாடினாள்

பசிக்கு பாலை
ஊட்டினாள்

என் வளர்ச்சியில்
அக்கரை காட்டினாள்

இத்தனையும் எளிதாய்
இல்லாதபோதும்

முகத்தில் மலர்ச்சியை
மட்டும் காட்டினாள்

என்நலன் மட்டுமே
அவள் நோக்கம்

அக்கம் பக்கம்

பொறாமையாய்
எனை பார்க்கும்

தேவை என்றெதுவும்
நான் தேடியதில்லை

என் தேவைகளை
அவள் தேடியதால்

அவள் தேவை எது
என்று நான்

உணரும்முன்னே

அவள் தேவையென்று
காலன்

அழைத்து சென்றான்

இருண்டு போனது
என் உலகம்

அவள் இல்லாது
போனதால்

நானோ இன்று
தனி மரம்..,

எழுதியவர் : நா.சேகர் (21-Nov-18, 6:42 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : amma
பார்வை : 763

மேலே