வித்தியாசமான ஆசை எனக்கு

பெத்தவளே....
வித்தியாசமான ஆசை எனக்கு....


உன் மடியில் உறக்கம்...
உயிர் பிரிகையில்...
கரங்கள் தட்டி எழுப்பனும்..
என் தேகத்தை ...
உயிர் பிரிந்தது தெரியாமல்.


ஊர் கூடி அழுகையில....
நீ அழுகாது...
தாலட்டு பாடனும்...


தேகம் உன் மாரப்பில் சாய்ந்து.....
நீ..,
ஒரு கை எண்ணெ எடுத்து..
சீவக்காய்,மஞ்சள் கலந்து...
ஒரு குடம் தண்ணில...
குளிக்கணும்...உன் கையால...
என் மழழை நினைவு...
மனசாட்சி நினைக்கனும்..
அந்த தருனத்தில் கூட...


வீடு விட்டு ...,
காடு செல்கையில...
பூமாலை ஊர்வலம் தேவையில்லை,...
உன் சேலை தொட்டில் போதும்...


மண்ணில் புதைந்த பின் ..கூட ....
உன் கருவறை வாழ்க்கை...
தேவை எனக்கு..,


உன்...
மார்பக பால் தேவை...
மண்ணில் புதைந்த பின்...
பருகிய மகிழ்ச்சியில்....
சொர்க்கலோகம் செல்வேன் ....
இது தான் ....
நான் கேட்பது....
I. want feedback

எழுதியவர் : மணிமேகநாதன் (21-Nov-18, 6:26 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 310

மேலே