அரணான மழையே

அரணான மழையே நீ தான்
அரிதான பொருளாய் ஆனாய் - மக்கள்
ஆணவ போக்கை களைய
ஆங்காங்கே பொழிவைத் தந்தாய்
உரிதான காலத்தில் வந்தால்
உயிரெல்லாம் செழித்தே வாழும்
உன்னில் நீ மாற்றம் அடைந்தால்
மண்ணில் பெரும் ஏற்றம் களையும்
வன்முறையாய் மாறிவிடாதே
தலைமுறையே அழிந்தே போகும்
_ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Nov-18, 10:05 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 120

மேலே