ஒதுங்குதல் நன்று
===================
அன்பு என்று சொல்லி நெஞ்சை
அண்டு கின்ற நூறிலே
என்று மென்று மன்பு வைக்க
எண்ணு கின்ற பேரிலே
ஒன்றி ரண்டி ருக்கு மிங்கு
உண்மை யாக ஊரிலே
நன்றி மிக்க வந்த வொன்றை
நம்பி வாழு பாரிலே
**
தாயை போல அன்பு வைக்க
தார முள்ள போதிலே
நோயை போல ணைக்கு மந்த
நும்ப ரத்தை நாடியே
பாயை போல்வி ரித்து வைத்து
பாவ முண்ண சாபமே!
தீயை கட்டி யாளு கின்ற
தீமை லாப மாகுமே
**
உண்மை போல தோணு தற்கு
ஒப்ப னைகள் போடுமே
கண்க ளோடு காத லாகி
கால னாக மாறுமே
பெண்மை யென்ற பேரெ டுத்து
பீதி யாக நாளுமே
மண்ணி லாடு மாது ளத்தை
விட்டொ துங்க லாகுமே!
**
**மெய்யன் நடராஜ்