உன் இதயம் எனக்கு தானம்
மலருக்கு மலரின் வாசம் தெரிவதில்லை
வண்டின் வருகையையும் அது மறுப்பதில்லை
இயற்கையே இப்படி இருக்கும் போது
இவளுக்கு ஏனிந்த இக்கடின் இறுமாப்பு
அவள் கண்களை நேரில் நான் பார்த்தாலே
கோபமாய் தோளை இடித்து கொள்கிறாள்
நான் கோவிலை சுற்றி வந்தால் கூட
அவளை நான் சுற்றுவதாய் பரிகசிக்கிறாள்
எத்தனை நாள் நீ ஏமாற்றுவாய் பெண்ணே
இந்திரன் இதற்கெல்லாம் தளரான் கண்ணே
என் உண்மை அன்பு நான் எய்த மன்மத பாணம்
ஒரு நாள் தருவாய் உன் இதயம் எனக்கு தானம்