என் இனிய பேரனே
என் இனிய பேரனே
ஈடு இணையற்ற
செங்கதிரோனே
உன் அன்னை
ஈர் ஐந்து திங்கள்
உன்னை கருவில்
சுமந்தாள்
நானோ நெஞ்சில்
சுமந்தேனேடா
நாள் காட்டியில்
நான் தினமும்
விழித்தேன்
உன் வருகைக்காக
வந்தாய்
ரோசாவின் குவியலாக
மகிழ்ச்சியில் நான்
திளைத்தேன்
பாட்டியாகி விட்டேனா
என்னை நானே
கிள்ளிக் கொண்டேன்
என் உலகம்
உன்னைச் சுற்றியதுடா
என் வாட்டத்தைப் போக்கி
மகிழ்ச்சியில் திளைக்க
வைத்தாய்
மடி தவழ வந்தவனே
விரல் பிடித்து உன்
மொழியை என்று
உதிர்ப்பாய்
உன் பொக்கைவாய்
சிரிப்பில்
உழன்று விட வைக்கிறாய்
உன் கன்னக் கதுப்பில்
மெல்ல முத்தம் ஈந்து
மேகமாய் உனை ரசிக்க
வான் மதியாய் நீ
உன் பிஞ்சு பாதம்
என் மார்பில்
எட்டி உதைப்பதில்
பறிகொடுப்பேனடா
என் இதயத்தை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
