சாதனை செய்வீர்

ஆதவன் உதிக்கும் நேரம்
அழகிய காலை நேரம்,
வேதனை மறையும் நேரம்
வெற்றியைத் தொடங்கும் நேரம்,
சோதனை செய்திடும் கதிரவன்
சொக்கத் தங்கமாய்க் கடலும்,
சாதனை செய்வீர் இன்றே
சாயும் கதிரின் முன்னே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Nov-18, 6:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : saathanai seiveer
பார்வை : 110

மேலே