பெண்ணே நீயும் நெருப்பும்

பெண்ணே
நீயும் நெருப்பும்
ஒன்று
நிலைக்கோர்
பெயர் உமக்குண்டு.......
நெருப்பு
பற்றி பரவி
எரியும் பொழுது
காட்டுத் தீ.....
அனலை உள்வைத்து
தகதகவென
கொதிக்க
அக்னி குழம்பு....
இருட்டு அறையின்
இருள் நீக்க ஒளிவீசும்
மெழுகுவர்த்தியில்
தீச்சுடர்....
தெய்வத்தின்
முன் வைக்கும்
திருவிளக்கில்
நற் தீபம்....
பெண்ணே
உன் பிம்பம் என்னில்
நிறைந்து வழிய நீ
தேவதை.....
நெருங்க நினைக்கையில்
கோபக்கணை வீசியெனை
துரத்தியடிக்க நீ
இராட்சசி.....
விரல் கோர்த்து
நடக்கையில் காதலி....
தெய்வத்தின்முன்
திருக்கரம் பற்ற
தாரம்....
என் வலியெல்லாம்
உன் மடி புதைத்திட
நீயென் தாய்....

எழுதியவர் : முகில் (26-Nov-18, 5:43 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 257

மேலே