காதலுக்கு மரியாதை

காதல் கடிதங்கள் பற்பல
எழுதி எழுதி
ஏங்கி போனதென்னவோ
என் இதயம் தான்...
நானும் பெண்ணாய் அவதரித்ததால்
நாணம் என்னை மேலும் தடுத்ததால்
என்னுள் துளிர்த்த காதலை
என்னுளே புதைத்த விந்தை எதனாலோ???
இன்றும் எனக்கு
விடையில்லா வினாதான்....
என் தகவல் பற்றி
யார்யாரிடமோ வினவியது
எதற்காகடா???
பூமனம் படைத்தவள் என்று
பூலோகம் எங்கெங்கும் சொல்கிறயாம்...
பூதம் போல் நானும்
தெரிவது போல
நேரில் கண்டு நீயும் ஐயம்கொண்டு
செல்வது
என் மேல் நீ கொண்ட காதலுக்கு மரியாதையாய்
என் இதயத்தையும்
உனக்காக பரிசளிப்பேன்
ஆனாலும் ஒருமுறையேனும்
உன் இதழால் அக்காதலை
என் செவிகளில் கேட்டிட சிறிய ஆசைதானடா....
~என்றும் அன்புடன் ஷாகி💝